சென்னையில் உள்ள பர்மா பஜாருக்கு வந்து வெளிநாட்டு படங்களின் ‘டிவிடி’ க்களை முன்னணி திரை உலகினர் வாங்குகிறார்கள்.
அங்குள்ளவர்கள் இந்த டிவிடிக்களை, இந்த இயக்குனர்கள் வாங்கி சென்றார் என கூறுவதாக சென்னை பல்கலைக்கழகத்தின் ஊடக துறை கருத்தரங்கில் காரசாரமாக விவாதித்துள்ளது.
இந்நிலையில் ஆடுகளம் படத்தின் டைரக்டர் வெற்றிமாறன் வெளிநாட்டு படங்களை பார்த்து சுடுவது பற்றி பேசியுள்ளார்.
தனுஸ் நடிப்பில் பொல்லாதவன் படம் வெளி வந்த போது ‘இது’ பை சைக்கிள் தீவ்ஸ் படம் மாதிரி இருக்கிறதே …! என்றார்கள்.
பொல்லாதவனை ‘பைசைக்கிள் தீவ்ஸ்’ படத்தோடு ஒப்பிடுவது எனக்கு வேடிக்கையாக பட்டது. ஆனால் ‘லொலிட்டா’ என்ற படத்தின் பாதிப்பில் பொல்லாதாவனை பண்ணினேன்.
அதனால் அந்த படத்தை காப்பி அடிச்சிட்டேன் என்று கூறமுடியாது. டைரக்டரின் சப் கான்சியஸ் மைண்டில் தங்கிய இன்ஸ்பிரேசனில் படம் பண்ணுகிறார்…மற்றபடி எந்த படத்தை பார்த்தும் படம் பண்ணுவதில்லை. நானும் அப்படிதான்.. என்றும் அவர் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி