உலகின் மிகப் புகழ்பெற்ற திரைப்பட இணையதளமான ஐஎம்டிபியின் சிறந்த பட பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் – தி ரோபோ இடம்பெற்றுள்ளது.
அதுவும் 10-க்கு 7.4 புள்ளிகளுடன் முதல் 50 இடங்களுக்குள் எந்திரன் வந்துள்ளது.
இது தமிழில் வேறு எந்தப் படத்துக்கும் கிடைக்காத பெருமையாகும்.
ஐஎம்டிபி என்பது ஹாலிவுட்டின் பைபிள் என்று போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் உலகம் முழுவதும் வெளியான படங்களில் சிறந்தவற்றை பட்டியலிடுகிறது இந்தத் தளம். பார்வையாளர்கள் வாக்குகளின் அடிப்படையில் இந்தப் படங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு ஐஎம்டிபியின் முதல் 50 பட வரிசையில் இந்தியாவிலிருந்து 7 படங்கள் இந்தப் பட்டியலுக்கு தேர்வாகியுள்ளன. அவற்றில் எந்திரனுக்கு 39வது இடம் கிடைத்துள்ளது.
தமிழில் எந்திரன் என்ற தலைப்பில் நேரடிப் படமாகவும், தெலுங்கு இந்தியில் ரோபோ என மொழிமாற்றுப் படமாகவும் உலகம் முழுவதும் வெளியான எந்திரன் வசூலில் புதிய சரித்திரம் படைத்துள்ளது. 75 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் எந்திரனுக்கு இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையும் உள்ளது. அதே போல வெளிநாடுகளில் அதிக வசூல் செய்ய திரைப்படமும் எந்திரன்தான். சன் பிக்சர்ஸின் அதிகாரப்பூர்வம அறிவிப்பின்படி இதுவரை ரூ 380 கோடிகள் வசூலித்துள்ளது மூன்று மொழிகளிலும்.
படத்தின் உருவாக்கம், தரம் மற்றும் ரஜினியின் மிகச் சிறந்த நடிப்பை சர்வதேச திரைக் கலைஞர்கள் பாராட்டினர். ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஆலிவர் ஸ்டோன், எந்திரன் ஒரு புதுமையான படம் என்றும்,தான் மிகவும் ரசித்துப் பார்த்த படம் இது என்றும் பாராட்டினார்.
இத்தனை சிறப்புகளுக்கும் சிகரம் வைப்பது போல் இப்போது ஐஎம்டிபியின் உலகப்பட பட்டியலிலும் எந்திரன் இடம் பிடித்துள்ளது.
இந்தப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது கிறிஸ்டோபர் நோலனின் இன்செப்ஷன்.10-க்கு 9 புள்ளிகள் அந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி