திரையுலகம் ஹீரோவின் மீசைக்காக காத்திருக்கும் அமீர் படக்குழு…

ஹீரோவின் மீசைக்காக காத்திருக்கும் அமீர் படக்குழு…

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

அமீர் இயக்கும் ஆதிபகவன் படத்தில் ஜெயம் ரவி, நீது சந்திரா இருவரும் நடிக்கின்றனர். ஜெயம் ரவி இடம்பெறும் காட்சிகளை எடுப்பதற்காக நவம்பர் மாதமே நாள் குறித்திருந்தார் அமீர்.
அமீர் இயக்கும் “ஆதிபகவன்” படத்தில் ஜெயம் ரவி, நீது சந்திரா இருவரும் நடிக்கின்றனர். ஜெயம் ரவி இடம்பெறும் காட்சிகளை எடுப்பதற்காக நவம்பர் மாதமே நாள் குறித்திருந்தார் அமீர். ஆனால் இன்னும் படப்பிடிப்பு நடந்தபாடில்லை. காரணம் ஜெயம் ரவிக்கு மீசை முளைக்கவில்லை என்பதுதான்.

பிரபுதேவாவின் “எங்கேயும் காதல்” படத்திற்காக மீசையை ஷேவ் செய்துவிட்டார் ஜெயம்ரவி. அமீரின் படத்திலோ அவருக்கு முரட்டுசை கதாபாத்திரம். மீசையை ஒட்டி சமாளிக்கலாமா என்று ஜெயம் ரவி சொல்ல “மீசை முளைக்கட்டும். அப்புறம் பார்த்துக்கலாம்” என்று சொல்லிவிட்டாராம் அமீர்.

“ஆதிபகவன்” யூனிட் ஜெயம் ரவிக்காக மீசைக்காக மட்டுமே தற்போது காத்துக்கொண்டிருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி