திரையுலகம் மாதவனுக்கும், எனக்கும் இடையே நல்ல நட்பு – கமல்

மாதவனுக்கும், எனக்கும் இடையே நல்ல நட்பு – கமல்

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

என்னையும் ரஜினியையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். யாரையும் காப்பி அடித்து நடிக்க மாட்டேன். எனக்கென்று தனித்துவம் உள்ளது என்றார் நடிகர் கமல்ஹாஸன்.

மன்மதன் அம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் நடந்தது. அந்த நிகழ்ச்சியின் ஒளிப்பதிவு செய்த காட்சியை நேற்று பத்திரிக்கையாளர்களுக்காக போட்டுக் காட்டினர்.

அடையாறு பார்க் ஷெரட்டனில் நடந்த இந்த நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் கமல்ஹாசன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், நடிகை சங்கீதா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் கமல்ஹாசன் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

‘அப்போது ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி எந்திரன் படம் நடித்தார். இந்தியாவிலே பெரிய பட்ஜட் படமாகவும் வெற்றிப் படமாகவும் அமைந்துள்ளது. அதே போல நீங்களும் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்கும் திட்டமுள்ளதா.. ஏற்கெனவே இதற்காக நீங்கள் முயற்சி எடுத்ததாகக் கூறுகிறார்களே?’, என்று கேட்டனர் பத்திரிகையாளர்கள்.

இதற்கு கமல் பதில் கூறுகையில், “நான் யாரையும் காப்பி அடிப்பதில்லை. எனக்கென்று தனித்துவம் இருக்கிறது. நடிப்பில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டால், என் குரு சிவாஜியைத்தான் நினைப்பேன். அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

என்னையும், ரஜினியையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். எங்களை நாங்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை என்றும், சேர்ந்து நடிப்பதில்லை என்றும் பல வருடங்களுக்கு முன்பே ஒப்பந்தம் செய்துகொண்டோம். இளமை ஊஞ்சலாடுகிறது காலத்திலேயே இந்த முடிவை எடுத்துவிட்டோம்.

பட்ஜட்டுன்னு பார்த்தா, தசாவதாரம் பெரிய பட்ஜெட் படம்தான். அதேபோல் இந்த மன்மதன் அம்பும் பெரிய பட்ஜெட் படம்தான்…,” என்றார்.

56 வயதிலும் இவ்வளவு இளமையாக இருக்கிறீர்களே, தங்கபஸ்பம் சாப்பிடுகிறீர்களா?, என்று ஒருவர் கேள்வி எழுப்ப,

“வயதை பற்றி பேசக் கூடாது. இளமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலே இளைமைதான். எல்லோரும் மூன்று வேளை சாப்பிடுவது மாதிரி நானும் மூன்று வேளை சாப்பிடுகிறேன். தங்க பஸ்பம் எதுவும் சாப்பிடுவதில்லை. தங்கபஸ்பம் சாப்பிடுகிற அளவுக்கு என்னிடம் தங்கம் இருந்தால், அதையும் சினிமாவிலேயே போட்டிருப்பேன்…” என்றார்.

சினிமாவுக்கு ஒத்திகை அவசியமா? என்று கேட்டதற்கு, “5 லட்சம் செலவில் நடைபெறும் நாடகத்துக்கே ஒத்திகை தேவைப்படும்போது, 50 கோடி செலவில் தயாரிக்கும் சினிமாவுக்கு ஒத்திகை அவசியம் இல்லையா? சினிமாவுக்கு ஒத்திகை பார்ப்பது, என் கண்டுபிடிப்பு அல்ல. மாடர்ன் தியேட்டர்ஸ் காலத்திலேயே ஒத்திகை இருந்தது. ஒத்திகை பார்ப்பதற்கு என்றே அந்த ஸ்டூடியோவில், மிகப்பெரிய ‘ஹால்’ இருந்தது…”, என்றார் கமல்.

மன்மதன் அம்பு படத்தின் படப்பிடிப்பை சொகுசுக் கப்பலில் படமாக்கப்பட்டது குறித்து கூறுகையி், மன்மதன் அம்பு’ படத்தின் கதை, உல்லாசப்பயணம் சம்பந்தப்பட்டது. அதில் நான் முன்னாள் கமாண்டோவாக நடிக்கிறேன். அந்த படத்தின் கதைப்படி, கப்பல் தேவைப்பட்டது என்றார் கமல்.

மாதவன் தொடர்ந்து உங்களது படத்தில் நடிக்கிறாரே என்ற கேள்விக்கு, மாதவனுக்கும், எனக்கும் இடையே நல்ல நட்பு இருப்பதால்தான் என்றார்.

இனி நீங்கள் எழுதும் கதைகளில் மட்டுமே நடிப்பீர்களா என்ற ஒரு கேள்விக்கு கமல் பதிலளிக்கையில், நல்ல கதை யார் எழுதினாலும், அதில் நான் நடிப்பேன். உங்களிடம் நல்ல கதை இருந்தால், நான் நடிக்க தயார் என்றார் கமல்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி