சிவா மனசுல சக்தி’, ‘மதுரை சம்பவம்‘ படங்களுக்குப் பிறகு, சுந்தர்.சி.யுடன் நகரத்துக்கு வந்திருக்கிறார் அனுயா. படத்தில் அவர் நடித்த முத்தக்காட்சி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கிளாமருக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகச் சொல்கிறார்களே?
இன்றைக்கு சினிமாவில் கிளாமர் தவிர்க்க முடியாதது. காட்சிகளில் இல்லையென்றால் பாடல் காட்சிகளில் கிளாமர் தேவை. ‘மதுரை சம்பவம்’ படத்தில் ஓவர் கிளாமராக நடித்தீர்களே என்கிறார்கள். கதைக்கு தேவை என்பதால்தான் அப்படி நடித்தேன். அதிலும் வெறுக்கத்தக்க வகையில் அந்த காட்சிகள் இருக்காது. ‘நகரம்’ படத்தில் கிளாமராக நடிக்கவில்லை. கிளாமர் தேவையா இல்லையா என்பதை கதைதான் தீர்மானிக்கிறது. நான் இல்லை.
‘நஞ்சுபுரம்‘ படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆடியுள்ளீர்களே?
அப்படியில்லை. அது புரமோஷனல் பாடல். படத்தில் இடம்பெறாது. என்னிடம் மியூசிக் ஆல்பத்தில் ஆடத்தான் கேட்டார்கள். அப்படித்தான் நடித்துள்ளேன். அதை ஐட்டம் பாடல் என்று சொல்ல முடியாது. மீடியாவில் அந்த பாடல் அதிகம் வெளியானால் எனக்கு நல்லதுதானே. அதனால் ஆடினேன்.
அதிக சம்பளம் கேட்கிறீர்களாமே?
அதிக சம்பளம் என்பது பற்றி ஏதும் வரைமுறை இருக்கிறதா என்ன? எனது கேரக்டருக்கு, நடிப்புக்கு, கால்ஷீட்டை பொறுத்து சம்பளம் கேட்கிறேன். அது அதிகமா குறைவா என்பது எனக்கு தெரியாது. எனக்கான தேவையை மட்டுமே கேட்கிறேன். இதில் என்ன தவறு இருக்க முடியும்?
மற்ற மொழிகளில் ஏன் நடிக்கவில்லை?
மத்தியபிரதேசம் மற்றும் உத்திரபிரதேச இயக்குனர்கள் இயக்கிய டெலிபிலிம்களில் நடித்திருக்கிறேன். இந்திதான் மொழி என்றாலும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் பேச்சு வழக்கில் மாற்றம் இருக்கிறது. இதையடுத்து இந்தியில் நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன். வழக்கமான கேரக்டர்களில் நடிக்க நான் எதற்கு என்பது என் கேள்வி. மற்றவர்கள் ஏற்க துணியாத, அல்லது இதுவரை நடித்திராத கேரக்டர்களில் நடித்தால் எனக்கு திருப்தி. அப்படியான வாய்ப்புக்கு காத்திருக்கிறேன்.
நகரம் படத்தில் என் கேரக்டருக்கு அந்த முத்தக்காட்சி தேவையாக இருந்தது. வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் ஒரு பெண், தனது கணவனுக்கு நம்பிக்கையூட்டுற மாதிரியான காட்சி அது. அந்த காட்சிக்கு தேவை என்பதால் அப்படி நடித்தேன். அதில் எந்தவித ஆபாசமோ, அருவருப்போ இல்லை. அப்படியிருந்தால் நானே மறுத்திருப்பேன். இந்த படத்தில் குரூப் டான்ஸர் கேரக்டரில் நடித்துள்ளேன். இதுவரை நான் நடித்திராத கேரக்டர் என்பதால் ஒப்புக்கொண்டேன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி