திரையுலகம் அப்செட் ஆன கௌதம் மேனன்

அப்செட் ஆன கௌதம் மேனன்

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

அரசியல் கூட்டணி போலதான் சினிமா கூட்டணியும். அவ்வப்போது `டமால்` ஆகி சம்பந்தப்பட்டவர்களை புலம்ப வைக்கும். தள்ளி நிற்பவர்களை ரசிக்க வைக்கும். லேட்டஸ்ட் `டமால்` கவுதம் மேனன் கூட்டணி.

விண்ணை தாண்டி வருவாயா படத்தின் பெரும் வெற்றிக்கு காரணம் கவுதம் மேனனின் ஸ்டைலிஷான திரைக்கதையும், அதற்கு நிகரான ஒளிப்பதிவும்! ஒவ்வொரு பிரேமையும் கண்ணில் ஒற்றிக் கொள்வது போல எடுத்திருந்தார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா. ரசிகர்களும், சினிமா விமர்சகர்களும் இவரது பணியை வெகுவாக ரசித்ததுடன் புகழ்ந்தும் பேசியதால் தன் அடுத்தடுத்த படங்களுக்கும் நீங்கள்தான் ஒளிப்பதிவாளர் என்று கூறியிருந்தார் கவுதம். அதுமட்டுமல்ல, விண்ணை தாண்டி வருவாயா படத்திற்கு முப்பது லட்சம் சம்பளமும் கொடுத்தாராம். இவ்வளவு செய்தவருக்கு மனோஜ் நன்றியோடு இருந்திருப்பாரே… மண்ணாங்கட்டி! திடீரென்று தனது கூட்டணியை மாற்றிவிட்டார். ஷங்கர் இயக்கப் போகும் த்ரி இடியட்ஸ் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கை ஒளிப்பதிவு செய்யவிருப்பவர் மனோஜ் பரமஹம்சாதான்.

ஷங்கர் படத்தை ஒளிப்பதிவு செய்யப் போகும் தகவலை கவுதமிடம் சொல்லவே இல்லையாம் அவர். கேள்விப்பட்டு கேட்டபோதுதான் ஆமாம் என்றாராம். விண்ணை தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு கவுதம் இயக்கிய நடுநிசி நாய்கள் படத்திற்கும் இவர்தான் ஒளிப்பதிவு செய்தார். இன்னும் கவுதம் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் மூன்று படங்களுக்கும் இவர்தான் ஒளிப்பதிவாளர் என்று முடிவே செய்துவிட்டார் கவுதம். இந்த நிலையில் மனோஜின் போக்கு, கவுதமுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறதாம். நான் சும்மாயிருந்தால் பரவாயில்லை. நானும் பிசியாதான் இருக்கேன். எதுக்காக என்னை விட்டுட்டு ஷங்கரிடம் போகணும் என்கிறாராம்.

நியாயமான கேள்வி. அம்சமா ஒரே இடத்தில் இருக்கிறதை விட்டுட்டு எதுக்குதான் இம்சை கொடுக்கிறாரோ இந்த ஹம்சா? அதுபோகட்டும்… இனிமேல் கவுதமுடன் சேர்ந்து பணியாற்றப் போவது பிரபல ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு!

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி