நெற்றி நிறைய பட்டை. முகத்துக்கு நேரே கைகளை தூக்கி ஒரு பலமான கும்பிடு! மைனா படத்தில் வரும் ‘கும்புடு குருசாமி’க்குதான் இப்போது கோடம்பாக்கத்தில் செம ரெஸ்பான்ஸ்! “தியேட்டர் பக்கம் போனா திரும்ப திரும்ப கும்புட சொல்லி ரசிக்கிறாங்க ஆடியன்ஸ். சந்தோஷமா இருக்குண்ணே” என்கிறார் வெங்கய்யா பாலன். ஆமாம் இவரது நிஜ பெயர் இதுதான்.
தீபாவளி சமயத்துல அடிக்கடி மைனா ட்ரெய்லரை டிவியில் போட்டாங்க. அதுல குளோஸ் அப்புல வந்து தீபாவளி வாழ்த்து சொல்வேன் நான். எட்டு கோடி தமிழர்களுக்கும் தீபாவளி வாழ்த்து சொன்ன ஆளு நானாதான் இருப்பேன். இந்த வாய்ப்பை கொடுத்த பிரபுசாலமன் சாருக்கு என்னோட நன்றி என்றார் பாலன். இதுவரைக்கும் 75 படத்தில் நடித்திருந்தாலும், பெயர் புகழ் சம்பளம் இத்யாதி இத்யாதின்னு இவரை உச்சத்துக்கு கொண்டு போனது மைனாதான்!
நமக்குன்னு ஒரு சென்ட்டிமென்ட் இருக்குண்ணே. இன்னைக்கு பிரபலமா இருக்கிற எல்லா டைரக்டர்களின் முதல் படத்திலேயும் நான் ஒரு சீன்லயாவது நடிச்சிருப்பேன். உதாரணத்துக்கு சொல்லணும்னா, டைரக்டர் சரணோட காதல் மன்னன், ஹரியோட தமிழ், எஸ்.பி.ஜனநாதனோட இயற்கை, சேரனோட வெற்றிக் கொடி கட்டுன்னு அடுக்கிகிட்டே போகலாம். பிரபுசாலமன் மீண்டும் இயக்க வந்தப்போ அவரோட கொக்கியில கூட நான் இருந்தேன். சந்தோஷம் என்னன்னா அவங்களோட தொடர்ந்து எல்லா படங்களிலேயும் நடிச்சிட்டு இருக்கறதுதான் என்கிறார் வெங்கய்யா பாலன்.
ஆர்வம் இருந்தா எதையும் செய்யலாம் என்பதற்கு இந்த பாலன் பெரிய உதாரணம். 12 பி படத்தில் இவரை நடிக்க அழைத்த டைரக்டர் ஜீவா, நிஜமாவே சாக்கடையில இறங்கி நடிக்கணும். முடியுமா? என்றாராம். அவர் சொல்லி முடிப்பதற்குள் சாக்கடைக்குள் இறங்கியிருந்தார் பாலன். “சில நேரம் விஷ வாயு தாக்கி தொழிலாளர்கள் இறந்திருக்காங்க. எனக்கு அந்த பயமெல்லாம் அப்போ வரல. அந்த ஆர்வமும் டெடிக்கேஷனும் இப்பவும் எங்கிட்ட மாறாம இருக்கு” என்கிறார்.
பார்ப்பதற்கு காமெடியாக இருந்தாலும் வெங்கய்யா பாலனின் ஆரம்பகால தொழில் ரொம்பவே சீரியஸ். திரைப்பட விநியோகஸ்தர் இவர். புதிய பாதை உட்பட சுமார் 150 படங்களை விநியோகம் செய்திருக்கிறாராம்
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி