திரையுலகம் ஒரு சாங் போச்சே – ஜெனிலியா

ஒரு சாங் போச்சே – ஜெனிலியா

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

தமிழில் ‘கனிமொழியில் ஜெய் ஜோடியாகவும் தெலுங்கில் ‘ஆரஞ்ச்’ படத்தில் ராம் சரண் தேஜா ஜோடியாகவும் நடிக்கிறார் ஷாசான் பதம்சி. ‘ஆரஞ்ச்’ படத்தில் ராம் சரணுடன் ஹீரோயின் ஜெனிலியா ஒரு பாடலில் நடிக்க இருந்தார். கடைசி நேரத்தில் அந்த பாடல் காட்சியில் ஷாசானை நடிக்க வைத்தனர். இதற்கு ராம் சரண் தேஜாதான் காரணமாம். அவர் சிபாரிசு செய்ததால் ஷாசானுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனால் ஜெனிலியா கோபம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ஷாசான் கூறியது:

ஒரே நேரத்தில் எனது இரண்டு படங்களும் வெளிவரவுள்ளது சந்தோஷமாக இருக்கிறது. ‘ஆரஞ்ச்’ படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ள ‘ருபா ருபா’ என்ற பாடல் ஹிட்டாகிவிட்டது. இப்பாடலில் என்னை நடிக்கச் சொன்னார்கள். வரிகள் புரியாவிட்டாலும் மெட்டு என்னை ஈர்த்தது. எந்நேரமும் அந்த பாடலைத்தான் பாடிக் கொண்டிருப்பேன். இதில் ஜெனிலியா நடிக்க இருந்தது உண்மைதான். படத்தில் எனது கேரக்டருக்கு இந்த பாடல் பொருந்தும் என இயக்குனர் நினைத்திருக்கிறார். அதனால் கடைசி நேரத்தில் மாற்றம் நிகழ்ந்தது. இதனால் ஜெனிலியா கோபம் அடைந்தாரா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. இந்த சிறு விஷயத்துக்காக அவர் கோபப்பட்டு இருக்க மாட்டார் என நம்புகிறேன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி