திரையுலகம்,முதன்மை செய்திகள் இன்ச் இன்ச்சாக வளர்ந்து வரும் ரஜினியின் “சுல்தான் தி வாரியார்”

இன்ச் இன்ச்சாக வளர்ந்து வரும் ரஜினியின் “சுல்தான் தி வாரியார்”

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

கிட்டத்தட்ட எந்திரன் போலதான் உருவாகி வருகிறது சுல்தான் தி வா‌ரியரும். ர‌ஜினி மகள் அகலக்கால் வைத்த இந்தப் படம் இன்ச் இன்சாகதான் வளர்கிறது.
சுல்தானை முழுக்க 3டி அனிமேஷனில் எடுக்க வேண்டும் என்பதுதான் சௌந்தர்யாவின் திட்டமாக இருந்தது. போட்ட பட்ஜெட் எகிறவும் படத்தை முடிக்க முடியுமா? போட்ட முதலை திருப்ப முடியுமா என்று சந்தேகம் வந்துவிட்டது.

இதனால் எவர்கி‌‌ரீன் பாக்ஸ் ஆஃபிஸ் ர‌ஜினியை ர‌ஜினியாகவே திரையில் தோன்ற வைக்கிறார்கள். அதாவது அனிமேஷன் இல்லாத நிஜ ர‌ஜினி. இந்த நிஜ ர‌ஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.

நிஜ ர‌ஜினிக்காக பாடல் காட்சிகளையும் சேர்க்க இருக்கிறார்கள் என்பது சுல்தானின் லேட்டஸ்ட் தகவல்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி