திரையுலகம் சினேகா உல்லால் இருக்கிறாரா,இல்லையா

சினேகா உல்லால் இருக்கிறாரா,இல்லையா

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

சிம்பு-பரத் இணைந்து கலக்கும் வானம் படத்திலிருந்து நடிகை சினேகா உல்லாலை நீக்கி விட்டதாக ஒரு செய்தி ரவுண்டு வருகிறது. ஆனால் படப்பிடிப்புக் குழுவினரோ அப்படியெல்லாம் இல்லையே என்று மண்டையை சொறிகின்றனர்.

சிம்பு-பரத் இரட்டை நாயகர்களாக மிரட்டும் படம் வானம். இதில் நாயகிகளாக அனுஷ்கா, வேகா மற்றும் முக்கிய வேடத்தில் சோனியா அகர்வால் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இவர்கள் தவிர சினேகா உல்லாலையும் பிடித்துப் போட்டுள்ளனர். இவர் பரத்துக்கு ஜோடியாக நடிப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் இயக்குநருடன் மோதல் ஏற்பட்டதால் சினேகா நீக்கப்பட்டதாக ஒரு தகவல் பரவியுள்ளது.

அப்படியா என்று படக்குழுவினர் வட்டாரத்தில் விசாரித்தபோது, இல்லைங்க அதெல்லாம் வெறும் புரளிதான். இப்படத்தில் ஒரு பிரமாண்ட பாடல் வருகிறது. அதில் சினேகா உல்லால் நடிப்பதாக முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் வேறு நடிகையை வைத்து ஆடவைக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது. இதைத்தான் படத்திலிருந்தே சினேகா உல்லால் நீக்கப்பட்டதாக சிலர் செய்தி பரப்பி விட்டுள்ளனர் என்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி