காமெடி,குணச்சித்திரம் என மெல்ல மெல்ல தனது கேரியரை உயர்த்திக்கொண்டு வந்தவர் கருணாஸ்.
பின்னர் திண்டுக்கல் சாரதி படத்தில் கதையின் நாயகனாக உருமாறினார். அதனைத்தொடர்ந்து அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் பணக்காரனாக துடிக்கும் சாதாரண இளைஞனை கண்முன் நிறுத்தி கலங்கவைத்த கருணாஸ், இப்போது ‘ஆணைமலை கந்தன்’ என்ற படத்தை தயாரித்து நடிக்கிறார்.
படத்தின் தொடக்கவிழா அழைப்பிதழில் போலீஸ் கெட்டப்பில் கருணாஸ் உட்கார்ந்திருந்த விதமே இந்த கதை காமெடி வகையறா என்பதை தெரிவித்தது. சுந்தர்.சி, பூபதி பாண்டியனிடம் உதவி இயக்குனராக இருந்த மனோகராதான் படத்தை இயக்கப்போகிறாராம். “போலீஸ்னா, காக்கி சட்டை, கம்பீர தோற்றம்தானே பார்த்திருப்பீங்க, இந்த போலீஸ் அப்படியல்ல முதல் பாதி பூனையாகவும், இரண்டாம் பாதி புலியாகவும் வருவார். நிஜ வாழ்க்கையில இப்படியான போலீஸ்தான் நிறைய இருக்காங்க. அப்படியானவர்களை கண்முன் நிறுத்தும் கேரக்டர்தான் கருணாஸுக்கு” என்ற மனோகராவிடம் ஒரு கேள்வி..
கடமையும், பொறுப்பும் மிகுந்த காவலர்களை இப்படி காமெடியனாக சித்தரிப்பது சரியா? என்றால், “போலீஸ்காரர்களை காமெடியானாக சித்தரிக்கும் படமாக இது இருக்காது. யதார்த்தமான கதையாகதான் இருக்கும். க்ளைமாக்ஸ் வரை சிரிப்புக்கு கேரண்டி தர்றேன்” என்றார்.
கருணாஸ் ஜோடியாக பெங்களூர் மாடல் அங்கனா நடிக்க, கருணாஸ் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி