திரையுலகம் ரஜினி தலைமையில் நடிகர் விஷ்ணுவுக்கு திருமணம்..!

ரஜினி தலைமையில் நடிகர் விஷ்ணுவுக்கு திருமணம்..!

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

வெண்ணிலா கபடிக் குழு, பலே பாண்டியா, துரோகி படங்களில் நடித்த விஷ்ணுவுக்கு விரைவில் டும் டும் டும்!
மணமகள் யார் தெரியுமா? சூப்பர் ஸ்டார் ரஜினியின் நண்பரும், வள்ளி படத்தின் இயக்குனருமான நட்ராஜின் மகள் ரஜினி.
டிசம்பர் முதல் வாரத்தில் இந்த திருமணம் நடைபெற இருக்கிறது. இது காதல் திருமணமாம். மணமகள் ரஜினிக்கு ஏன் இந்த பெயர் வந்தது என்பதே ஒரு சுவாரஸ்யமான தகவல்.
தனது நண்பனின் நினைவாகதான் இந்த பெயரை மகளுக்கு சூட்டினாராம் நட்ராஜ். ரஜினியும் இவரும் இன்ஸ்ட்டியூட்டில் படிக்கிற காலத்திலிருந்தே நண்பர்கள். ரஜினி உச்சிக்கு போனாலும், நட்ராஜின் மேலுள்ள அன்பு மட்டும் அப்படியே தொடர்கிறது.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் நட்ராஜின் வீட்டுக்கே வந்து அரட்டையடிக்கிற அளவுக்கு அந்த நட்பு இன்னும் இன்னும் என்று இறுகிக் கொண்டே போகிறது. இந்த திருமணத்தை யார் நடத்தி வைப்பார்கள் என்பதை இவ்வளவுக்கு பிறகும் நாம் சொல்லணுமா என்ன?

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி