மணிரத்னம் எடுத்த குழந்தைகள் படமொன்றின் பெயர்கொண்ட நடிகை அவர். நல்ல பாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் கவர்ச்சியில் தாராளம்காட்டி முதலிடத்தை பிடிக்க விரும்புகிறார். ஆனால் பாவம்… இயக்குநர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்புகள்தான் அவரை தேடித் தேடி வருகிறது.
எந்த வாய்ப்பு வந்தாலும் மறுக்காமல் ஒத்துக்கொள்ளும் அந்த ஆந்திரத்து நடிகை “படத்தில் கவர்ச்சியாகவும் கொஞ்சம் சீன் வையுங்கள். அப்போதுதான் என் மார்க்கெட் உயரும்” என்று நேரடியாகவே கேட்கிறாராம்.
வழக்குகளில் சிக்கி தலைமறைவாய் திரிந்துவந்த இயக்குநர் ஒருவர் நீண்ட இடைவெளிக்குப்பிறகு ஒரு படத்தை இயக்கிவருகிறார். நாயகன் ஆசை அவரையும் விட்டுவைக்கவில்லை. நாயகியாக நடிக்கும் சிலரில் ஆந்திரத்து நடிகையும் ஒருவர். குளியல்காட்சியொன்றில் நடிக்குமாறு நடிகையைக் கேட்க அவரும் குஷியாக ஒத்துக்கொண்டிருக்கிறார். இயக்குநருக்கே ஆச்சர்யமாகப் போய்விட்டதாம்.
ஆனால் கடைசியில்தான் அவருக்கு நடிகையின் வியாபார சாதுர்யம் விளங்கியிருக்கிறது. நடிப்புக்கு தனியாக சம்பளம், கவர்ச்சிக்கு தனியாக சம்பளம் என்று வெட்டு ஒண்ணு துண்டு ஒண்ணாக பிசினஸ் பேசி ரெட்டைச் சம்பளம் வாங்கிவிட்டாராம் நடிகை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி