திரையுலகம் “புதுமுகம்ங்க” என்றால் எதிர்முனை ‘டொக்…’

“புதுமுகம்ங்க” என்றால் எதிர்முனை ‘டொக்…’

angadi theru Anjali

கௌதமன், களஞ்சியத்தோடு நிறுத்திக்கலாம். இனிமேல் நடிச்சா பெரிய ஹீரோக்களுடன்தான் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் அஞ்சலி. (சர்ர்ரி… அந்த முடிவை அவங்களும் எடுக்கணுமே)

அங்காடி தெரு ரிலீஸ் ஆகிற வரைக்கும், திண்டாடி நின்றவர்தான் அஞ்சலி. அதன்பின் நிலைமை அப்படியே தலைகீழ். பெரிய நடிகர்கள் அழைக்காவிட்டாலும், அவர்களின் லிஸ்ட்டில் அஞ்சலியும் இருந்தார். ஹீரோயினுக்கும் நடிப்பை வெளிப்படுத்துகிற அளவுக்கு ஸ்கோப் உள்ள கேரக்டர் என்றால், அப்படத்தின் இயக்குனர்கள் முதலில் கதவை தட்ட நினைத்தது அஞ்சலி வீட்டைதான். அந்தளவுக்கு நடிப்பில் நல்ல பெயர் எடுத்த அஞ்சலி, சமீபகாலமாக எடுக்கும் முடிவுகள் அவ்வளவு திருப்தியாக இல்லை என்று முணுமுணுக்கிறது சினிமா வட்டாரம்.

“நேற்று வந்த ஓவியா, அமலா கூட பெரிய நடிகர்களுடன் நடிக்க கிளம்பிவிட்டார்கள். நான் மட்டும் ஏன் முகம் தெரியாத புதுமுக நடிகர்களுடன் நடிக்கணும்? அதனால் கொள்கையை மாற்றணும். கூட்டணியை மாற்றணும்” என்று கொதித்துக் கொண்டிருக்கிறாராம் தனது சினிமா கைடுகளிடம்.

கதைசொல்ல அப்பாயின்ட்மென்ட் கேட்கும் இயக்குனர்களிடம் “ஹீரோ யாருங்க?” என்பதுதான் அவரது முதல் கேள்வியாக இருக்கிறது இப்போது. “புதுமுகம்ங்க” என்றால் எதிர்முனை ‘டொக்…’ ஆகிவிடுகிறதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி