அரசியல்,முதன்மை செய்திகள் ஒபாமாவுக்கு குடியரசு கட்சி வைத்த ஆப்பு…

ஒபாமாவுக்கு குடியரசு கட்சி வைத்த ஆப்பு…

obama

அமெரிக்காவின் பிரதிநிதிகள் அவைக்கான 435 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் அதிபர் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி 144 இடங்களை மட்டுமே இதுவரை பிடித்துள்ளது. எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி 213 இடங்களை வென்றுள்ளது.

பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தன. சென்ட் சபையில் மொத்தம் உள்ள 100 இடங்களில் 37 இடங்களுக்கும், 50 மாகாண கவர்னர்களில் 37 கவர்னர் பதவிகளுக்கும் தேர்தல் நடந்தன.

ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் பெரும்பாலான இடங்களிலும் குடியரசு கட்சியே முன்னணியில் உள்ளது. இன்னும் 5 இடங்களை பிடித்தால் குடியரசு கட்சி பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை பெற்று விடும்.

செனட் சபையில் குடியரசு கட்சி 23 இடங்களை பிடித்து உள்ளது. ஜனநாயக கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் செனட் சபையில் ஜனநாயக கட்சிக்கு மொத்தம் உள்ள 100 இடங்களில் 38 இடங்கள் இருந்தன. இப்போது 10 இடங்கள் பெற்று 48 இடங்களை பிடித்து உள்ளது. எனவே ஜனநாயக கட்சி வெற்றி பெற்று மெஜாரிட்டியை பெறும் நிலையில் உள்ளது.

கவர்னர் தேர்தலிலும் குடியரசு கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஜனநாயக கட்சிக்கு ஏற்பட்டுள்ள தோல்வி ஒபாமாவுக்கு ஏற்பட்ட தோல்வியாக கருதப்படுகிறது. அவருடைய பொருளாதார கொள்கை ஏற்கனவே விமர்சிக்கப்பட்டு வந்தன. பொருளாதார கொள்கை சரி இல்லாததால் மக்கள் அவருக்கு எதிராக ஓட்டளித்து இருப்பதாக கருதப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி