திரையுலகம் ரஜினி சொன்ன கதை

ரஜினி சொன்ன கதை

rajini01

தலைவர் எண்பதுகளின் பிற்பகுதியில் ஒரு விழாவில் கூறிய கதை இது. (1987 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன்.) அவர் கூறிய காலகட்டங்களில் இந்த கதை யாரும் சொல்லாத ஒன்று. அதற்க்கு பிறகு, பல பத்திரிக்கைகளில், பிரசங்கங்களில் இந்த கதையை நிறைய பேர் சொல்லி பிரபலபடுத்திவிட்டார்கள். இருப்பினும் தலைவர் சொன்னதை கேட்க, படிக்க திகட்டுமா என்ன?
தவயோகியும் கொத்த மறந்த பாம்பும்!
“ஒரு காட்டில் பாம்பு இருந்துச்சு. அது அந்த வழியா யார் போனாலும் கொத்திடும். முதியோர், இளைஞர்கள் , பெண்கள், குழந்தைகள் இப்படி ஒருவரை கூட அது விட்டு வைத்ததில்லை. இந்தநாள் அந்தப் பக்கமே யாரும் போகமாட்டார்கள்.
ஒரு நாள் தவயோகி ஒருத்தர் அந்த கட்டு பக்கம் போனார். அங்கிருந்த ஜனங்க, “சாமி அந்தப் பக்கம் போகாதீகள். அங்கே ஒரு பொல்லாத பாம்பு இருக்கு. கொத்திடும்” என்று எச்சரிச்சாங்க.

தவயோகி அவர்கள் சொல்வதை பொருட்படுத்தாமல் சிரித்தபடியே கட்டுக்குள் போனார். வழக்கம் போல பாம்பு அவரையும் கோத்த வந்தது. அனால் அவரின் தவ வலிமை காரணமாக அதனால் கோத்த இயலாமல் நின்றுவிட்டது.
“என்ன பாம்பே, நீ எல்லாரையும் கொத்துகிறாயாமே இனிமே அப்படி கொத்தக்கூடாது” என்று உத்தரவு போட்டுவிட்டு போய்விட்டார்.

பாம்பும் அவரது வார்த்தைக்கு கட்டுப்பட்டு அன்றிலிருந்து யாரையும் கொத்துவதில்லை. பாம்புக்கு நாம பயப்படும் விஷயமே அது கோபம் வந்தால் கொத்தும் என்பது தான். இந்த பாம்பு கொத்தாமல் இருக்கவே, அதன் மீதிருந்த பயம் அந்த ஊர் ஜனங்களுக்கு போயிடுச்சு. சின்னப் பசங்க கல்லால் அடிச்சாங்க. அதை தோல் மேல தூக்கி போட்டு விளையாடினாங்க. எவ்வளவோ தொல்லைகள் கொடுத்தாங்க. பாம்பு எல்லாத்தையும் சகித்துக்கொண்டு சுமா இருந்துச்சு.
கொஞ்ச நாள் கழித்து தவயோகி மீண்டும் அந்த காட்டு பக்கம் வந்தார். அப்போது ஒரு புதர் பக்கத்திலிருந்து முனகல் சத்தம் கேட்டது.
தவயோகி, “யாரது…?” என்று கேட்டார்.
“சாமி… யாரையும் கொத்தக்கூடாது என்று நீங்கள் எனக்கு போட்ட கட்டளையால் எனக்கு நேர்ந்த கதியை பாருங்கள். என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிவிட்டார்கள்?” என்று பாம்பு சொன்னாதும், தவயோகி, “அட மதிகெட்ட பாம்பே, உன்னைக் கொத்தக்கூடாது என்று சொன்னேனே தவிர, சீறக்கூடாது என்று சொல்லவில்லையே….” என்று திரும்பக் கேட்டார்.
ஒரு திரைப் பட விழாவில் சூப்பர் ஸ்டார் 80 களின் கடைசீயில் ஒரு விழாவில் தலைவர் சொன்ன கதை இது. ஒரு மிகப் பெரிய கருத்தை எத்துனை சுலபமாக புரியவைத்துவிட்டார் பார்த்தீர்களா.
கதையில் ஒளிந்துள்ள ராஜ நீதி!
இந்த கருத்து, அரசாலும் அரசர்களுக்கும் பொருந்தும்.
இதைத் தான் வள்ளுவர்,
“கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்” என்று கூறுகிறார்
பொருள் :
அரசனானவன், குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கடுமை காட்டுவது போல காட்டி – தண்டிக்கும் போது மென்மையாக தண்டிக்க வேண்டும். இது தான் ஒரு அரசனது செல்வாக்கு நீடிக்கின்ற வழியாகும். (அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தின் போது அப்போதைய முதல்வர் ஜெ. இதை பின்பாற்றாததால் தான் இப்போது இப்போது அவஸ்தை படுகிறார்.)
தலைவர் கூறிய கதைகளில், பல எனக்கு மிகவும் பிடிக்கும். அவற்றில் என்னை வியக்க வைத்தது, சில மாதங்களுக்கு தமிழக முதல்வருக்கு நடந்த நன்றியறிவிப்பு விழாவில் அவர் கூறிய “ஓசி ஓட்டல் சாப்பாடு” கதை தான்

நம்மால இது மாதிரி யாரும் கேள்விப்படாத ஒரு கதையை சொல்ல முடியுமா?
தலைவர் மேடைகளில் இப்படி கூறும் கதைகள் குறித்து என் நண்பர் ஒருவரிடம் – நிறைய நூல்களை படிக்கும் வழக்கமுடையவர் அவர் – கூறினேன் “தலைவர் எங்கேயிருந்து தான் இந்தக் கதைகளை பிடிக்கிறாரோ தெரியலே. marvelous story. நீங்க எத்துனை புஸ்தகங்கள் படிக்கிறீங்க…. இந்த மாதிரி ப்ராக்டிகலான கருத்துக்களை கொண்ட கதைகள் எங்கேயாவது படிச்சிருக்கீங்களா….? நானும் தான் நிறைய படிக்கிறேன். நம்மால இது மாதிரி யாரும் கேள்விப்படாத ஒரு கதையை சொல்ல முடிந்தால் அதிசயம் தான்” என்றேன். அதற்க்கு அவர் சிரித்துக்கொண்டே, “நம்மால நிச்சயம் முடியாது. ஏன்னா, நாமெல்லாம் புஸ்தகங்களை படிக்கிறோம். அவர் வாழ்க்கையை படிக்கிறார். அது தான் வித்தியாசம்” என்றார்.
உண்மைதானே!

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி