திரையுலகம் ரஜினிக்கு மலேசியா கமலுக்கு சிங்கப்பூர்

ரஜினிக்கு மலேசியா கமலுக்கு சிங்கப்பூர்

kamal01

உலக நாயகன் கமலஹாசன் நடித்து வரும் மன்மதன் அம்பு படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வருகிறார். படத்தில் த்ரிஷா கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் மன்மதன் அம்பு படத்தை உலகம் தழுவிய அளவில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்யும் திட்டத்தில் உள்ளார் படத் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின்.

எந்திரன் இசை வெளியீடு மலேசியாவின் கோலாலம்பூரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு உலக அளவில் பிரமிப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் மன்மதன் அம்பு படத்தையும் வெகுசிறப்பாக வெளியிட முடிவு செய்துள்ளது ரெட் ஜெயண்ட் மூவிஸ். இதற்காக சிங்கப்பூரில் இசை வெளியீட்டை நடத்த ஏற்பாடுகளையும் அதிரடியாக செய்விட்டாராம் உதயநிதி.

சிங்கப்பூரில் உள்ள எக்ஸ்போ அரங்கில் நவம்பர் 20 ந் தேதி இசைவெளியீட்டு விழா நடக்கவுள்ளது. இதில் படக்குழுவினர் அனைவருடன் சினிமா பிரபலங்கள் பலரும் பங்கேற்கவிருக்கிறார்களாம். மேலும் இந்த விழாவில் கலந்து கொள்ளவுள்ள 500 க்கும் மேற்பட்ட ரசிகர்களை சிங்கப்பூருக்கு அழைத்து செல்லும் ஏற்பாட்டையும் படக்குழு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி