ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங்கின் தலைமைப் பொறுப்பு குறித்து முன்னாள் ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜெஃப் தாம்சன் சாடியுள்ளார்.
தான் வீழ்த்திய 200 டெஸ்ட் விக்கெட்டுகளில் 100 விக்கெட்டுகளை இங்கிலாந்திற்கு எதிராகவே வீழ்த்தியுள்ள தாம்சன் எப்போதும் பாண்டிங் தலைமையின் திறமைகள் குறித்து தனது ஐயங்களை எழுப்பி வந்துள்ளார்.
“2004-இல் பாண்டிங் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார், ஆனால் அன்று முதல் முன்னேற்றம் எதையும் நான் காணவில்லை, நான் மட்டுமே இந்த கருத்தை வைத்திருப்பவன் அல்ல பலரும் இந்த கருத்தை வைத்துள்ளனர்.
அவர் மிகச்சிறந்த பேட்ஸ்மென், ஆனால் தலைமைப் பொறுப்பு என்பது வேறு விதமானது. இவரை முதன் முதலில் கேப்டனாக தேர்வு செய்யும் போது என்னால் நம்ப முடியவில்லை. அப்போது அவர் அனுபவமற்ற ஒரு வீரராக இருந்தார் அவ்வளவே. இதற்கு முன்னர் ஒரே முறைதான் அவர் உள் நாட்டு அணியில் கேப்டன் பொறுப்பு வகித்திருக்கிறார். பின் எப்படி அவர் தேர்வு செய்யப்பட்டார் என்பது ஆச்சர்யமாக இருந்தது.
இப்போதெல்லாம், விஷயங்கள் தனக்கு சாதகமமக இல்லாத போது வெறுப்பை காட்டுகிறார். ஹார்டிஸ் போன்ற விக்கெட்டுகளை வீழ்ழ்த்தும் சாத்தியக்கூறே இல்லாத ஒரு வீரரை இவர் அணியில் வைத்துள்ளார், சைமன் கேடிச், மைக்கேல் கிளார்க் போன்றவர்கள் இவரை விட சிறப்பாக வீசுகின்றனர்.
அணித் தேர்வு, ஃபீல்டிங் உத்திகள், மற்றும் பல விஷயங்களை பாண்டிங் தவறாகவே செய்கிறார்.
இவ்வாறு தாக்குதல் விமர்சனம் வைத்துள்ள ஜெஃப் தாம்சன், அணியில் பிரட் லீ இடம்பெற்றிருக்கக் கூடாது என்று கூறியுள்ளார். அதே போல் இவர் மிட்செல் ஜான்சன் பயனுள்ள வீச்சாளர் எனினும் தனக்கு அவரது பேட்டிங்தான் பிடித்தமானது என்று கேலியாக குறிப்பிட்டுள்ளார் ஜெஃப் தாம்சன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி