திரையுலகம் ரஜினியின் அடுத்த பட நாயகியின் நிலை….

ரஜினியின் அடுத்த பட நாயகியின் நிலை….

News about Rajini's next movie heroine vijayalaxmi

விஜயலட்சுமி தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக சுல்தான் தி வாரியர் (புதிய பெயர் ஹரா) படத்தில் மட்டும் நடித்து வருகிறார். கைவசம் வேறு படங்கள் இல்லாததால் பிசினசில் இறங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி விஜயலட்சுமி கூறியதாவது :

படங்கள் இல்லை என்பது உண்மைதான். இது நானாக ஏற்படுத்திக் கொண்டது. சூப்பர் ஸ்டாரின் சுல்தான் தி வாரியர் ( ஹரா ) வெளிவந்த பிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறேன். நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன். எனது அக்கா, அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை திறக்கப் போகிறார். அவருக்கு உதவி வருகிறேன் அவ்வளவுதான். பிசினஸ் எனக்கு ஒத்துவராது என்றார் அவர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி