இலங்கையின் பாதுகாப்புச் செலவினங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது குறித்து அந்நாடு மீது சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எப் அதிருப்தியடைந்துள்ளது.
இலங்கை தற்போது ஓரளவுக்கு அபிவிருத்திப் பாதையில் சென்று கொண்டிருந்தாலும், வரவு-செலவுத்திட்ட துண்டு விழும் தொகை மற்றும் பொதுக்கடன்களை குறைப்பதற்கும் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்துள்ளது.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியைத் துரிதப்படுத்த வேண்டுமாயின் பாதுகாப்புச் செலவினங்களைக் குறைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள நிதியத்தின் பணிப்பாளர் சபை, கடந்த வருடத்தை விட இவ்வருடம் இலங்கையின் பாதுகாப்புச் செலவினம் 6 விழுக்காடு அதிகரித்துள்ளமை குறித்தும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
உள்நாட்டுப் போர் நிறைவடைந்த சூழலில் அவ்வாறான பாதுகாப்புச் செலவின அதிகரிப்பிற்கான அவசியம் குறித்தும் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். அதற்குப் பதிலாக இலங்கையின் மீள்கட்டுமாணப் பணிகள் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளின் அவசியம் குறித்தும் ஐஎம்எப் வலியுறுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி