மந்திரப் புன்னகை படத்தின் பாடல் வெளியீட்டு விழா முடிந்த பின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் பேசிய படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்நாத் ஷெட்டி ஒரு புதுவிஷயத்தை எடுத்துவிட, ஒரே சிரிப்பு நிருபர்கள் மத்தியில். அப்படியென்ன சொன்னார் அவர்?
மந்திரப்புன்னகை படத்தில் ஒரு ஸ்டடிக்கேம் கேமிராவை பயன்படுத்த நினைத்தாராம். கேமிரா இருக்க வேண்டும். அதே நேரத்தில் அது மற்றவர்கள் பார்வையில் படாத அளவுக்கு சிறியதாகவும் இருக்க வேண்டும். இதுதான் ஒளிப்பதிவாளரின் எதிர்பார்ப்பு. ஏனென்றால் பரபரப்பான சிட்டியில் ஹீரோவை பல இடங்களில் நடக்க வைத்து ஷ§ட் பண்ண வேண்டும். படப்பிடிப்பு நடக்கிறது என்று தெரிந்தாலே கூட்டம் கூடி யதார்த்தம் கெட்டு விடும். அதற்கேற்றார் போல மும்பையில் ஒரு கேமிரா இருந்தது. ஆனால் அதை இங்கு கொண்டு வர ஏகப்பட்ட தடைகள். காரணம் ரொம்ப பிசியாக இருந்த அந்த கேமிரா, இங்கு வரவழைக்கப்பட வேண்டும் என்றால் முன்கூட்டியே புக் பண்ண வேண்டும். திடீரென்று அது கிடைக்காமல் போனால் ஷ§ட்டிங்கே தடை படும். வேறென்ன செய்வது என்று யோசித்தவர்கள் அலைந்து திரிந்து சென்னையிலேயே அதுபோல ஒரு கேமிராவை கண்டு பிடித்தார்களாம்.
“நாங்க அதை செல்லமா நித்தியானந்தா கேமிரான்னு சொல்வோம். அந்தளவுக்கு கம்ஃபர்ட்” என்றார் ராம்நாத் ஷெட்டி. ஸ்வாமிஜி எங்கெல்லாம் யூஸ் ஆவுறாரு பாருங்க!
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி