திரையுலகம் இளையராஜா பாட்டை வெட்டி ஒதுக்கிய இயக்குனர்…

இளையராஜா பாட்டை வெட்டி ஒதுக்கிய இயக்குனர்…

ilaiyaraja

யாராயிருந்தா என்ன? லகான் என் கையில்தான் என்று கொக்கரிக்கும் இயக்குனர்தான் மிஷ்கின். கேப்டன் ஆஃப்த ஷிப் என்பதை மிக சரியாக விளங்க வைப்பதிலும் சமர்த்தர். இல்லையென்றால் இளையராஜாவின் பாடல்களை வேண்டாம் என்று படத்திலிருந்தே நீக்குகிற அளவுக்கு தில் வருமா?

அது நந்தலாலா கதை. நாம் இப்போது சொல்லப் போவது ‘யுத்தம் செய்’ இன்சிடெண்ட்! அமைதி பூங்காவாக இருக்கும் சேரனுக்கு ஆக்ஷன் இமேஜ் கொடுக்கப் போகிற படம் இது.

ஒரு ஃபேன்ட்டசிக்காக டைரக்டர் அமீரை இப்படத்தில் ஆட வைத்திருக்கிறார் மிஷ்கின். அமீருடன் ஆடியிருப்பது நீத்துசந்திரா. படம் முடிந்தபின் முதல் பிரதியை போட்டுப் பார்த்த மிஷ்கின், பாடல்கள் நடு நடுவே நுழைந்து கதையோட்டத்தை கெடுக்குதே என்று நினைத்தாராம். படக்கென்று சிஸரை எடுத்து சரக் சரக் என்று நறுக்கித் தள்ளிவிட்டார் எல்லா பாடல்களையும். கடைசியில் மிஞ்சியது அமீர் ஆடிய அந்த குத்துப்பாடல்தான். அதுவும் கதையோடு பொருந்தியிருப்பதால் தப்பித்ததாம்.

மிட்நைட் ‘கண்’ணன் மிஷ்கினின் இந்த அதிரடி, மியூசிக் டைரக்டருக்கு பிபி யை ஏற்றியிருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி