வெற்றி கிடைக்கிற வரைக்கும் தலைகீழாக நின்று போராடுவதும், அந்த வெற்றிக்குப்பின் தலைகால் தெரியாமல் ஆடுவதும் தமிழ்சினிமா கால காலமாக பார்க்கிற விஷயம்தானே! நேற்றைய நம்பர் ஒன்கள் இன்றைய சைபராக கூட இல்லாமல் தவிப்பதையெல்லாம் யார் நினைத்துப் பார்க்கிறார்கள்?
இதோ, ஒரு லேட்டஸ்ட் ஆட்டம்! ஒரு பெரிய படத்திலிருந்து கலை இயக்குனர் தோட்டா தரணி மாற்றப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக ராஜீவன் நியமிக்கப்பட்டிருக்கிறார். காரணம், ஏராளமான விருதுகள் வாங்கியிருக்கும் தோட்டாவுக்கே, ‘செட்டுன்னா இப்படியிருக்கணும்’ என்று அட்வைஸ் செய்தாராம் அந்த ஹீரோ. சரி அந்த வேலையையும் நீங்களே பார்க்கலாமே என்று ஒதுங்கிக் கொண்டார் தோட்டா.
மூக்கை நுழைப்பதை அவரோடு நிறுத்திக் கொள்ளவில்லை ஹீரோ. அப்புறமும் தொடர்கிறார். கடந்த வாரம் அப்படத்தின் ஒளிப்பதிவாளரான ரவி.கே.சந்திரனுக்கு லைட்டிங் விஷயத்தில் ஒரு கரெக்ஷன் சொன்னாராம். பாலிவுட் ஹீரோக்களே இவரிடம் பம்மிக்கொண்டு நிற்பார்கள். அந்தளவுக்கு திறமைசாலி இவர். கடுங்கோபம் கொண்ட அவர், “இப்படியெல்லாம் என்கிட்ட பேசுனா நான் இந்த படத்திலிருந்தே விலகிடுவேன். பார்த்துக்கங்க” என்றாராம் இயக்குனரிடம்.
அவங்கள்ளாம் வாயை திறந்து சொல்லிடுறாங்க. என்னால அது கூட முடியலையே. என்று தவித்துக் கொண்டிருக்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன். இதையெல்லாம் நேருக்கு நேர் பார்த்தாலும் ‘முருகா…’ என்று கன்னத்தில் கை வைப்பதை தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை டைரக்டரால்! ஒருவேளை ஹீரோவுக்கு எட்டாம் அறிவும் இருப்பதாக ஒப்புக் கொள்கிறாரோ என்னவோ?
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி