திரையுலகம் எந்திரனுக்கு எதிர் கருத்து …

எந்திரனுக்கு எதிர் கருத்து …

enthiran-10

எந்திரன் படத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் ஆயிரமாயிரம் கருத்துகள். படம் எப்படியிருக்கிறது என்பதை பற்றி சிலரும், இந்தப் படத்தின் வியாபார முறைகள் பற்றியும் சில பத்திரிகைகள் காட்டமாகவே தங்கள் முணுமுணுப்பை வெளிப்படுத்தின.

எந்திரன் விஷயத்தில் தனி ஆதிக்கம் செலுத்தப்படுகிறது என்ற கருத்தில் வெளியிடப்பட்ட சில கட்டுரைகள் ரஜினி ரசிகர்களையும் சன் நிர்வாகத்தையும் கவனிக்க வைத்திருக்கிறது. இந்த நிலையில் எந்திரனுக்கு எதிராக கருத்துகள் தெரிவித்த தினமணி, டெக்கான் குரோனிக்கல் நாளேடுகளுக்கு சன் நிர்வாகம் விளக்கம் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. குறிப்பிட்ட காலத்திற்கும் மேற்படி கட்டுரைகளுக்கு மறுப்பு தெரிவிக்காவிட்டால் மான நஷ்ட வழக்கு தொடருவோம் என்றும் எச்சரித்திருக்கிறதாம்.

இது ஒருபுறம் இருக்க, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா என்று எந்திரன் படம் தொடர்பான பிரமோஷன் டூர் அடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. இரு தினங்களுக்கு முன் பால் தாக்கரேவை நேரில் சந்தித்தது நினைவிருக்கலாம்.

‘சிட்டி’க்கு தெரியுமா, சிட்டியில நடக்குற விஷயம்?

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி