எந்திரன் திரைப்படம் வெற்றியை அடுத்து மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
மும்பையில் இந்தி திரையுலக பிரமுகர்களுக்காக எந்திரன்(ரோபோட்) சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இதற்காக ரஜினி மும்பை வந்திருந்தார்.
அப்போது நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், எந்திரன் ரசிகர்களுக்குப் பிடித்துள்ளதில் மிகுந்த மகிழ்ச்சி. இப்போது ஓய்வு எடுத்துக்கொண்டு விடுமுறையில் செல்ல விரும்புகிறேன் என்றார்.
எந்திரன் சிறப்புக் காட்சியை அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், ஐஸ்வர்யா, அபிஷேக், தேவ் ஆனந்த் மற்றும் பிரேம் சோப்ரா உள்ளிட்டோ ர் கண்டு ரசித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி