திரையுலகம்,முதன்மை செய்திகள் சன் டிவிக்கு இதெல்லாம் ரொம்ப சாதாரணம்…

சன் டிவிக்கு இதெல்லாம் ரொம்ப சாதாரணம்…

suntv

கோலிவுட்டில் வதந்திகளுக்கு என்றுமே குறைவிருக்காது. ஆனால் இந்த வதந்தி உண்மையாக இருக்கலாம் என்று ஹாட்டாக விவாதிக்க ஆரம்பித்து இருகிறார்கள் சினிமா நிருபர்கள் வட்டாரத்தில்.

எந்திரன் முடிந்த பிறகு மூன்று முட்டாள்கள் படத்தை இயக்க உள்ள ஷங்கர், அதன்பிறகு ஜாக்கி சான், ரஜினிகாந்த் இணையும் பன்மொழிப் படத்தை (தமிழ், தெலுங்கு ஹிந்தி, சீனம், ஆங்கிலம்) இயக்க இருப்பதாகவும், இந்தப்படத்தை சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சிறகு முளைத்திருக்கும் செய்திகளில் உண்மை இருக்கலாம் என்கிறார்கள். காரணம், ஜாக்கி சானை வைத்து ஆஸ்கர் ரவிச்சந்திரந்தான் முதலில் பன்மொழிப்படத்தை எடுக்க முயற்சித்தார். ஆனால் நிதியைத் திரட்டுவதில் பின்னடைவு ஏற்பட்டதால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இப்போது அதே திட்டத்தை மிகப்பெரிய பட்ஜெட்டுக்கு மாற்றி ரஜினியின் அடுத்த படமாகவும் இதைக்கொண்டு வந்துவிடலாம் என்று திட்டமிட்டு வருகிறார்களாம்!. அதே நேரம் சன் பிக்சர்ஸ் போன்ற நிறுவனமொன்றினாலேயே இது சாத்தியமாகும் என்றும், சன்னிற்கும் இது சர்வதேச சினிமா நிறுவனம் என்கின்ற அறிமுகம் தரும் என்பதனால், ஆர்வம் கொள்ளும் என்றும் பேசப்படுகிறது.

இதற்கிடையில் தனது அடுத்த படத்துக்கு முன் ரஜினி போதிய இடைவெளி எடுத்துக் கொள்வார் என்பதயே அவரது ஸ்டேட்மெண்ட் சொல்கிறது. “இந்த தருணத்தில் தான் ஓய்வெடுக்க விரும்புவதாகவும், விடுமுறையாக எண்ணி செலவிட விரும்புவதாகவும்” ரஜினி மும்பையில் தெரிவித்துள்ளார். இது வதந்தியா இல்லை இதில் உண்மை இருகிறதா என்பது வரும் நாட்களில் தெரிந்து விடலாம் என்கிறார்கள்.

ஆனாலும், ரஜினி, சங்கர், படங்கள் வெளிவந்ததும் வரும் வழக்கமான பரப்பரப்புக்கள் இவை என்று சொல்லப்படுவதையும் மறுப்பதற்கில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி