‘தீவிரவாதிகளை’ அழித்த மாவீரன், சிங்களத்து ஹீரோ, போர் வீரன் என்றெல்லாம் ஒரு நேரத்தில் சிங்களர்களாலும், ராஜபக்சே அன் கோவினராலும் புகழ்ந்து தள்ளப்பட்ட பொன்சேகாவின் இன்றைய நிலை படு கேவலமாகியுள்ளது.
கக்கூஸ் போகக் கூட தண்ணீர் கொடுக்கப்படாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் பொன்சேகா.
சிறையில் கைதியாக அடைபட்டுள்ளார் பொன்சேகா. 30 மாத சிறை த் தண்டனையை அனுபவிக்க ஆரம்பித்துள்ளார். அவரை வெலிக்கடையில் உள்ள சிறையில் அடைத்துள்ளனர்.
அவருக்கு 0-22032 என்ற கைதி எண் தரப்பட்டுள்ளது. வழக்கமான கைதிகள் அணியும் கால் சட்டை, சட்டையைப் போட்டு விட்டுள்ளனர். சிமென்ட் தரையில்தான் தூக்கம். முதல் நாள் முடிவில் காலை 5 மணிக்கு எழுந்த பொன்சேகா டாய்லெட் போக நினைத்தபோது அங்கு தண்ணீர் வைக்கப்படவில்லையாம்.
இதையடுத்து சற்று தூரம் கோப்பையுடன் நடந்து சென்று தண்ணீர் பிடித்து வந்து காலைக் கடனை முடித்தாராம்.
மேலும், கைதிகளோடு கைதியாக வரிசையில் நின்றி, பீங்கான் தட்டில் சாப்பாட்டை வாங்கிச் சாப்பிட்டுள்ளார். காலை உணவாக சோறும், தேங்காய் சட்னியையும் கொடுத்துள்ளனர். அவர் இருக்கிறாரா என்பதை அவ்வப்போது சிறை அதிகாரிகள் வந்து பார்த்துச் செல்கின்றனராம்.
தற்போது கொடுக்கப்பட்டுள்ள கைதி டிரஸ் போதுமானதாக இல்லை என்பதால் டெய்லர் ஒருவரை கூட்டி வந்து அளவெடுத்துச் சென்றுள்ளனராம்.
பகல் சாப்பாட்டையும் வரிசையில் நின்று வாங்கி சாப்பிட்டாராம் பொன்சேகா. இரவு சாப்பாட்டை 7 மணிக்கு முடித்துக் கொண்டு தனது அறைக்குப் போய் தரையில் படுத்துத் தூங்கினாராம்.
30 வருட போரை தோற்கடித்தமைக்காக தமது கணவருக்கு தரப்பட்ட பரிசு இதுவென பொன்சேகாவின் மனைவி அனோமாக கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.
போர் வீரன் என போற்றப்பட்ட பொன்சேகா இப்போது சாதாரண கைதியாக அடைபட்டுள்ளதை அங்குள்ள நாளிதழ்கள் பெரிய செய்தியாக வெளியிட்டுள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி