திரையுலகம்,முதன்மை செய்திகள் 3000 ரூபாய் ஏலம் போன எந்திரன் டிக்கெட்!

3000 ரூபாய் ஏலம் போன எந்திரன் டிக்கெட்!

enthiran

அரியலூரில் தியேட்டர் நடத்தி வருபவர் கார்த்திக். உலகமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுமையுடன் எந்திரன் படத்தை கொண்டாடிக் கொண்டிருப்பதை பார்த்து தன்னுடைய தியேட்டரிலும் ஏதாவது புதுமையை செய்ய நினைத்த கார்த்திக் அதற்கு கண்டுபிடித்த வழி “ஏலம்”.

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஏலம் எடுப்பதை பார்த்து அதேபோல் செய்யலாம் என்று யோசித்து, தன்னுடைய தியேட்டரின் முதல் நாள் முதல் ஷோ, முதல் டிக்கெட்டை “ஏலம்” விட்டிருக்கிறார்.

பலத்த போட்டிக்கு இடையே 3000 ரூபாவிற்கு அந்த டிக்கெட் ரசிகர் ஒருவரால் ஏலம் எடுக்கப்பட்டது.

இப்படிப்பட்ட விசித்திரங்கள் ரஜினி படங்களுக்கு மட்டுமே சாத்தியம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி