September 29, 2010

தொழில்நுட்பம்

தினசரி 400 ஏழைகளுக்கு 3 வேளை உணவளிக்கும் நாராயணன் கிருஷ்ணன்

ஏழைகள் பசியால் அவதிப்படுவதை பார்த்து வருத்தமடைந்த மதுரை யைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணன் என்ற மனிதர், தினமும் 400 பேருக்கு 3 வேளை உணவளித்து வருகிறார். இதனால், உலகளவில் நல்ல மாற்றத்தினை கொண்டு வரும் சிறந்த மனிதர்களுக்கான விருது போட்டிக்கு இவரை தேர்ந்தெடுத்துள்ளது அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சி. பசியில் வாடும் அனைவருக்கும் உணவளிப்பதே இறைப்பணி என்று வாழ்ந்தார் வள்ளலார். அதேபோல நாராயணனும் ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டு வருகிறார். இந்த காலத்திலும் வீதியில் அனாதையாய் இருக்கும் ஏழைகளுக்கு உணவளிப்பததையே வாழ்வின் லட்சியமாக கொண்டு ஒருவர் வாழ்கிறார் என்றால் கேட்பதற்கே ஆச்சரியமாக உள்ளது அல்லவா?. இந்த மனிதர் மதுரையை சேர்ந்த நாராயணன் கிருஷ்ணன். நட்சத்திர ஹோட்டலில் நல்ல சம்பளத்தில் செஃப் ஆக வேலை பார்த்து வந்தவர் நாராயணன். ஆனால் சமுதாயத்தால் கைவிடப்பட்டு வீதியில் ஆனாதையாய் திரியும் ஏழைகளைப் பார்த்து அதிர்ந்து பெரும் பணத்தைத் தரும் அந்த வேலையை விட்டு விட்டு தினமும் தானே உணவு தயார் செய்து அவர்களது பசியை போக்கி வருகிறார். தினமும் 400 பேருக்கும் மேல் 3 வேளை உணவு அளித்து வருகிறார் சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நல்ல சம்பளத்திற்கு செஃப் வேலைக்கான வாய்ப்பு நாராயணனுக்கு வந்தது 2002ம் ஆண்டில். இதற்கான நேர்முகத் தேர்வுக்காக சுவிஸ் சென்றார். பின்னர் அதை முடித்துக் கொண்டு வெற்றிகரமாக மதுரை திரும்பினார். வீட்டுக்குச் செல்லும் வழியில் அவர் கண்ட காட்சி அவரது இதயத்தை ஒரு விநாடி நிறுத்திப் போட்டது. சிக்குப் பிடித்த தலை முடியுடன், உடலில் ஒட்டிக் கிடந்த துணியுடன், நகரக் கூட முடியாத நிலையில், சாப்பிட வழியில்லாமல் தனது மலத்தையே சாப்பிட்டுக் கொண்டிருந்தார் ஒரு பாவப்பட்ட முதியவர். இந்தக் காட்சி அவரை அப்படியே புரட்டிப் போட்டு விட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், அந்தக் காட்சியைப் பார்த்து நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். எனது சொந்த சகோதரர் ஒருவர் இப்படிப்பட்ட அவலமான நிலையில் இருக்கும்போது வெளிநாட்டு வேலை எனக்குத் தேவையில்லை என்ற முடிவுக்கு நான் வந்தேன். இந்தியாவிலேயே தங்க முடிவு செய்தேன். முதல் வேலையாக அந்த முதியவருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தேன். அவருக்கு நல்ல உடை கொடுத்து, தலைமுடியை வெட்டி சரிப்படுத்தினேன். அன்று தொடங்கியது எனது இந்த பணி. பின்னர் இதை பெரிய அளவில் செய்ய வேண்டும் என்பதற்காக 2003ம் ஆண்டு அட்சயா டிரஸ்ட்டைத் தொடங்கினேன். அட்சயப் பாத்திரத்தை ஏந்திய மணிமேகலையின் நினைவாக இந்தப் பெயரை வைத்தேன். அந்த அட்சயப் பாத்திரத்தில் அள்ள அள்ள குறையாமல் வந்ததுபோலு எனது திட்டமும் நிற்காமல் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற நம்பிக்கையில்தான் இந்தப் பெயரை வைத்தேன் என்றார் நாராயணன். நாராயணனும், அவரது அறக்கட்டளைக் குழுவினரும் அதிகாலை 4 மணிக்கே எழுந்து விடுகின்றனர். தனது கையால் சமைத்த உணவுப் பொருட்களை பொட்டலமாக போட்டு எடுத்துக் கொண்டு கிட்டத்தட்ட 170 கி.மீ அளவுக்கு சுற்றி வந்து ஏழை, எளிய மக்களை சாப்பிட வைக்கின்றனர். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 400 பேர் வரை நாராயணனால் சாப்பிடும் வாய்ப்பைப் பெறுகின்றனராம். இத்துடன் நிற்கவில்லை இவர்களது வேலை. சாப்பாடு கொடுக்கிறார். அதை சாப்பிடக் கூட முடியாத நிலையில் (மன வளம் குன்றியவர்கள்) இருந்தால், பக்கத்திலேயே உட்கார்ந்து அவர்களுக்கு சாப்பாட்டை ஊட்டி விடுகின்றனர். குடிக்க தண்ணீரும் கொடுத்து அவர்கள் சாப்பிட்டு முடித்த பின்னர்தான் இடத்தை விட்டு நகர்கின்றனர். அத்தோடு நிற்காமல் அழுக்குப் படிந்த தலைமுடி, காடாக வளர்ந்து கிடக்கும் தாடியுடன் யாராவது இருந்தால் அவர்களை தனது காரில் ஏற்றி தனது இருப்பிடத்திற்கு அழைத்து வருகிறார். அவர்களுக்கு தானே உட்கார்ந்து அழகாக முடி வெட்டி, தாடியை ஒட்ட வழித்தெடுத்து, முகத்தை சீராக்குகிறார் நாராயணன். பிறகு தான் பெற்ற குழந்தைக்குச் செய்வது போல ஒரு ஸ்டூலைப் போட்டு அவர்களை உட்கார வைத்து சோப்பு போட்டு குளிக்க வைத்து அழகுபடுத்தி நல்ல உடையைக் கொடுத்து உடுத்திக் கொள்ள வைக்கிறார். அப்போது தங்களையே புதிதாக பார்த்த மகிழ்ச்சியில் அவர்களது முகத்தில் தெரியும் வெட்கச் சிரிப்பைப் பார்த்து நாராயணன் அடையும் பூரிப்பு-அதை வார்த்தையால் சொல்ல முடியாது. இதுவரை கிட்டத்தட்ட 10.2 லட்சம் சாப்பாடுப் பொட்டலங்களை இலவசமாக விநியோகித்துள்ளாராம் நாராயணன். நாராயணன் குழுவினர் அணுகும் ஏழைகளில் பெரும்பாலானோர் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள்தான். தனக்காக சாப்பாடு தரும் நாராயணனுக்கு நன்றி சொல்லக் கூடத் தெரியாத அளவுக்கு மனதால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள். இது தனக்கு பெரும் மன நிறைவு தருவதாக கூறுகிறார் நாராயணன். நான் சமைப்பதை விட அதை சாப்பிடும்போது அவர்கள் முகத்தில் தெரியும் நிம்மதிதான் எனக்கு பெரும் மன நிறைவைத் தருகிறது. அவர்களின் ஆன்மா திருப்தி அடைவதை அவர்களின் முகத்தில் பார்க்கிறேன். எனது மக்களை பட்டினியிலிருந்து காக்க விரும்புகிறேன் என்றார் கண்களில் நீர் துளிர்க்க. உலகளவில் நல்ல மாற்றத்தினை கொண்டு வருபவர்களில் 10 பேரை தேர்ந்தெடுத்து மக்கள் வாக்களிப்பின் மூலம் அவர்களில் ஒருவரை ஒவ்வொரு ஆண்டும் ஹீரோவாக தேர்ந்தெடுத்து விருது அளித்து வருகிறது சிஎன்என் தொலைக்காட்சி. இந்த வருடம் சிஎன்என் தேர்ந்தெடுத்த பத்து பேரில் நாராயணன் கிருஷ்ணனும் ஒருவர். இவருக்கு விருது கிடைத்தால் விருதுக்கு தான் பெருமையாக இருக்கும். ஆனால் இந்த விருதின் மூலம் அவர் பணி மேலும் வளர்ந்து விரிவடைந்து பெரிய ஆலமரமாக வாய்ப்புள்ளது. நீங்களும் அவருக்கு ஆதரவாக வாக்க அளிக்க இங்கு சென்று வாக்களிக்கலாம். நாராயணன் கிருஷ்ணனின் அட்சயா டிரஸ்ட்டின் இணையதளம். நாராயணனின் சேவையில் பங்கெடுக்க விரும்புவோர் இதை அணுகலாம்.

திரையுலகம்

மன்மதன் அம்பு சில சுவாரசியங்கள்…

தனது ஒவ்வொரு படத்திலும் புதுப்புது கெட்டப், செட்டப் என்று ஏதாவது புதுமைகளை புகுத்துவது கமலின் வழக்கம். அந்தப் பாணியை ‘மன்மதன் அம்பு’ படத்திலும் வெளிப்படுத்தியுள்ளார் கமல். இதில் கே.எஸ்.ரவிக்குமார் வேறு இணைந்துள்ளார். கேட்கவா வேண்டும் சுவாரசியத்திற்கு. உதய நிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. மன்மதன் அம்புவின் கதை, திரைக்கதையை, காதல், காமெடி கலந்து வடிவமைத்துள்ளார் கமல். டைமிங் காமெடியில் கலக்கும் கிரேசி மோகன், நகைச்சுவை ததும்பும் வசனங்களால் மன்மதன் அம்புக்கு கூர் திட்டியுள்ளார். விரைவு, துள்ளியம், அம்சமான இயக்கம் என படத்தை சொன்ன தேதிக்குள் எடுத்துக் கொடுத்துவிட்டார் ரவிக்குமார். இதுதான் அவரின் சிறப்பு. இவரின் இந்தத் திறமைக்காகதான் ‘தசாவதாரம்’ படத்தையே இவரை இயக்கச் சொன்னார் கமல். தசாவதாரத்துடன் ஒப்பிடுகையில் மன்மதன் அம்பு எம்மாத்திரம் அவருக்கு என்று சொல்லிவிடலாம். ஆனால் மன்மதன் அம்பிலும் சில சிறப்பம்சங்கள் உள்ளனவாம். ரவிக்குமாரின் இயக்கத்திற்கு சரியான வேலைவாங்கும் வகையில்தான் மன்மதன் அம்பு அமைந்தது என்கிறது படக்குழு. கமல் இதில் 30 வயது இளைஞனாய் காதல் அம்பு விடுகிறார். (நிஜத்திலேயே கமல் அப்படித்தானே இருக்கிறார்…) மாதவன், திரிஷா, சங்கீதா ஆகியோர்களின் கூட்டணி ரசிகர்களுக்கு சிற(ரி)ப்புக் கொண்டாட்டமாக அமையும். இந்தக் கூட்டணியில் சமீபத்தில் இணைந்திருப்பவர் ஓவியா (களவாணி பட நாயகி). படத்தின் கடைசி காட்சியையே ஓவியா தோன்றுவது போலத்தான் எடுத்து முடித்துள்ளாராம் கே.எஸ்.ரவிக்குமார் மேலும், படத்தில் ஒரு முக்கியமான கெஸ்ட் ரோலில் நடித்து அந்த ரோலையே பெஸ்ட் ரோலாக்கியுள்ளாராம் சூர்யா. அவர், ‘ஏழாம் அறிவு’ படத்தில் ஸ்ருதி கமலஹாசனுடன் நடித்துவரும் வேளையில், இரண்டு நாள் கால்ஷீட்டில் இந்த ரோலை முடித்துக் கொடுத்திருக்கிறார். இவர்கள் போக இந்தப் படத்தில் இன்னும் சில முன்னணி நடிகர்கள் கெஸ்ட்ரோலில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுபற்றி இப்போது சஸ்பென்ஸாக வைத்துள்ளனர். திரிஷாவின் அம்மா உமாவும்கூட இதில் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திரிஷா இதில் சொந்தக் குரலில் பேசி நடித்துள்ளார். அவரது இனிமையான குரலில் மயங்கியவர்கள் கமல், மாதவன், ரவிக்குமார் உட்பட படக்குழுவினர் அனைவரும், படம் வெளிவந்தப் பிறகு தமிழ் ரசிகர்களும். இனிமையான குரலுடனும், கமலிடம் கற்றுக்கொண்ட தமிழ் உச்சரிப்புடனும் கலக்கியிருக்கிறார் திரிஷா. அவரின் கூடுதல் கவர்ச்சியும் இதில் அசத்தல்தான். மன்மதன் அம்பு படத்தின் முதல் இரு கட்டப் படப்பிடிப்புகள் ஐரோப்பாவிலும், சொகுசு கப்பலிலும் நடந்தன. இறுதிகட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து முடிந்துள்ளது. ஐரோப்பா, கொடைக்கானல் என குளுகுளு பிரதேசங்களின் அழகினை கண்ணுக்கு விருந்தாக்கவிருக்கிறார் ஒளிபதிவாளர் மனுஷ் நந்தன். கச்சிதமான படத்தொகுப்பு-ஷான் முகமது. இசை-தேவி ஸ்ரீபிரசாத். தசாவதாரத்தில் பின்னணி இசையில் கலக்கிய இவர். இதில் மொத்த இசையிலும் தனிராஜ்யம் அமைத்துள்ளார்.படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் விரைவில் போஸ்ட் புரெடக்‌ஷன் வேலைகள் தொடங்க உள்ளன. குறிப்பிட்டத் தேதிக்குள் விரைவாகவும், சிறப்பாகவும் படப்பிடிப்பு முடிந்துவிட்டதை கொண்டாடும் விதத்தில் சைதாப்பேட்டையில் உள்ள தனது வீட்டில் நிறைவு விழா விருந்தை நடந்தினார் ரவிக்குமார். படக்குழுவினர் அனைவரும் இந்த விருந்தில் கலந்துகொண்டு உற்சாகமாக கொண்டாடினர். அப்போது படத்தை டிசம்பரில் வெளியிட்டுவிடும் திட்டத்தில் இருப்பதாக தெரிவித்தார் ரவிக்குமார். ‘மன்மதன் அம்பு’ காதல் பிளஸ் காமெடி விருந்து விரைவில் திரையில்.

திரையுலகம், முதன்மை செய்திகள்

ரஜினியோடு மோத விரும்பாத கமல், விஜய்!

விஜய் படம் இல்லாத தீபாவளி பட்டாசு இல்லாத தீபாவளி மாதிரி என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் சொல்வதுண்டு. வரிசையாகத் தோல்விப் படங்களைச் சந்தித்த விஜய், காவலன் மூலம் தனது கணக்கை நேர் செய்ய விரும்பினார். இதனால் தீபாவளிக்குக் காவலனைத் திரைக்குக் கொண்டுவந்துவிடுவது என்று முடிவு செய்தே படத்தை ஆரம்பித்தார்கள். ஆனால் எந்திரன் ரிலீஸ் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டத்தில் இப்போது கில்லி ஹீரோவும் தனது படத்தை டிசம்பருக்குத் தள்ளி வைத்திருக்கிறார். இதேபோல் கமல் படமும் எந்திரனால் தள்ளி வைக்கப்பட்டிருகிறது. கமலின் மன்மதன் அம்பு திட்டமிட்டபடி முடிந்துவிட்டது. தீபாவளிக்குப் படம் வெளியாவது உறுதி என்று இயக்குனர் தரப்பில் சொல்லிவந்தார்கள். கமலும் இப்போது மன்மதன் படத்துக்கு டப்பிங் பேசிவருகிறார். ஆனால் படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் நவம்பரில்தான் முடியும்; தீபாவளி ரேஸில் மன்மதன் இல்லை என்று சொல்லிவிட்டாராம் இயக்குனர் ரவிக்குமார். ஆர்யா சார்பில் உதயநிதி ஸ்டாலின் கேட்டுகொண்டதற்கு ஏற்ப எந்திரன் வெளியீட்டை ஒரு வாரம் தள்ளி வைத்த சன் பிக்ஸர்ஸ், மன்மதனை டிசம்பர் கடைசி வாரம்தான் வெளியிட வேண்டும் என்று சொல்லிவிட்டதாம்

திரையுலகம்

எந்திரனின் – அமிதாப் இருந்திருந்தால்…? – ஷங்கர்!

எந்திரன் ஒரு அறிவியல் படம் என்ற போதிலும் அதனை பார்ப்பதற்கு அறிவியலினை அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என “எந்திரன்” படத்தின் இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் விளக்கியுள்ளார். அறிவியலைப் பற்றி கவலைப்படாமல் படத்தினை முழுவதும் ரசிக்கும்படியும் ஷங்கர் கூறியுள்ளார். அறிவியலாளர்களுக்கு “எந்திரன்” மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ள ஷங்கர், இந்திய அளவில், ஏன்? உலக அளவில் கூட எந்திரன் போன்று ஒரு படம் இதுவரை வெளிவந்ததில்லை என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். “எந்திரன்” படத்தில் தற்போது Danny Denzongpa நடித்துள்ள வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு, முதலில் தான் அமிதாப்பச்சனை தான் அணுகியதாக ஷங்கர் அதிர்ச்சியூட்டும் தகவலை முதன்முறையாக வெளியிட்டுள்ளார். ரஜினி, ரஹ்மான், ஷங்கர், ஐஸ்வர்யா என ஏற்கனவே இந்தியாவின் அனைத்து பிரபலங்களும் இணைந்துள்ள எந்திரனில் “அமிதாப்பும்” நடித்திருந்தால்…? படம் பிரம்மாண்டங்களின் பிரம்மாண்டமாய் அமைந்திருக்கும். ஆனால் அமிதாப் வில்லனாக நடிக்க விரும்பவில்லை. அமிதாப் வில்லனாக நடித்த பல படங்கள் தோல்வியை தழுவின. எனவே தான் வில்லனாக நடித்தால் ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற நோக்கில், அமிதாப்பச்சன் வில்லனாக நடிக்க மறுத்துவிட்டதாகத் தகவல்.

திரையுலகம்

த்ரிஷாவை “கிஸ்”ஸடிக்க மறுத்த நடிகர்

இந்தியில் தீபிகா படுகோனேவும், சயீப் அலி கானும் இணைந்து நடித்து சக்கைபோடு போட்ட படம் ‘லவ் ஆஜ் கல்’. அதனுடைய தெலுங்கு ரீ-மேக்கில் த்ரிஷாவும், பவன் கல்யாணும் நடித்து வருகிறார்கள். இந்தி படத்தில் மிகப்பிரபலமான ஒரு உதட்டோடு உதடி உரசும் கிஸ் சீன் ஒன்று உள்ளது. அதன் சாராம்சம் எதுவும் குறையாமல் தெலுங்கில் அப்படியே எடுக்க விரும்பினாராம் அதன் இயக்குனர் ஜெய்ந்த் பிரான்ஜீ. எப்படியோ த்ரிஷாவிடம் பேசி அந்த சீனை பற்றிய முக்கியத்துவத்தையும் விளக்கி சம்மதிக்க வைத்துவிட்டார். ஆனால் ஹீரோ பவன் கல்யாணிடம் சொல்லியபோது அவர் தனது இமேஜூம் மற்றும் அரசியம் வாழ்க்கையும் பாதிக்கப்படும். அதனால் கண்டிப்பாக முடியாது என்று மறுத்துவிட்டாராம். அதனால் அதற்கு இணையான மாற்று சீனை யோசித்து வருகிறாராம் இயக்குனர். பவன் கல்யாண் சிரஞ்சீவியின் சகோதரர் என்பதும், அவருடைய கட்சியான பிரஜா ராஜ்ஜியத்தில் பெரிய பொறுப்பில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரையுலகம்

எந்திரன் இசைப் பணி… இரண்டுமணி நேரம்தான் தூங்கினேன்! – ரஹ்மான்

எந்திரன் இசைப் பணி மிகவும் சவாலாக இருந்தது. இந்தப் படத்தின் இசையமைப்பின்போது இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்கினேன், என்றார் ஏ ஆர் ரஹ்மான். சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து நாளை உலகம் முழுவதும் வெளியாகும் எந்திரன் படம் குறித்து ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் தினகரன் நாளிதழுக்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டி: இசைப்புயல் ரகுமான் அதிகம் பேசாதவர். தனது இசை பேசப்பட வேண்டும் என எதிர்பார்ப்பவர். ஒவ்வொரு படத்தையும் முதல் படமாக கருதி கடுமையாக உழைப்பவர். அதனால்தான் இரட்டை ஆஸ்கர் விருதுகளை வென்றெடுக்க முடிந்தது. அப்படிப்பட்ட செயல்வீரர்களுக்கு பேச நேரம் கிடைக்காதுதான். ஆனாலும், ரஜினியும் ஷங்கரும் எந்திரன் பட தயாரிப்பில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை வாசகர்களோடு பகிர்ந்துகொண்டதை சுட்டிக் காட்டி, அடுத்ததாக உங்கள் பேட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் என சொன்னதும் கூச்சத்துடன் புன்னகைத்தார். அப்போது சிதறிய முத்துக்கள்.. “எந்திரன் படத்துல எல்லாமே பிரமாண்டமா இருக்கும்னு தெரிஞ்சுகிட்டேன். பாடல்கள் ஒவ்வொன்னையும் ஒரு வகையான உணர்வோட படமாக்கி இருக்கார் ஷங்கர். படத்தோட மையக் கருத்துக்கு பின்னணி இசையும் பொருத்தமா அமையணும்னு அவர் எதிர்பார்த்தார். படத்துல ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் காட்சிகள் நிறைய இருக்குறதனால ரசிகர்கள் ஒன்றி போயிடுவாங்க.. அந்த இடத்துல சவுண்ட் பெருசா இருந்தாதான் கவனிப்பாங்க.. ஸோ, பெருசா செய்யணும்னு ஆசைப்பட்டோம். அதனால என்ன ஆச்சுன்னா, லண்டன் சென்னை மும்பைனு மூணு இடத்துல பின்னணி இசை சேக்குற மாதிரி ஆயிருச்சு.. அதுக்கு ரொம்ப செலவாகும்னு சொன்னோம். சன் பிக்சர்ஸ் தயங்காம அதுக்கு ஏற்பாடு பண்ணினாங்க.. அதுக்கு நன்றி சொல்லணும். லண்டன்ல பாத்தீங்கன்னா 100 இசைக் கலைஞர்களை வச்சு ரெக்கார்ட் பண்ணிருக்கோம். அங்க டோல் பவுண்டேஷன்னு சொல்லிட்டு ஃபேமஸான ஒரு டோல் குரூப் இருக்கு. அவங்க இந்த படத்துக்கு வேலை செஞ்சுருக்காங்க. ரொம்ப தள்ளிப்போக கூடாது, படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணணும்னு சொன்னதால கடுமையா வேலை செஞ்சிருக்கோம்.. சீக்கிரமாவும் முடியணும் ரொம்ப நல்லாவும் வரணும்னா அவ்ளோ உழைச்சாதான முடியும்.. அந்த வேலை நடந்தப்ப ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம்தான் தூங்கினோம்னா நீங்களே பார்த்துக்குங்க… ‘சிவாஜி’ படம் பண்ணும்போது செக்கோஸ்லோவியாவுல உள்ள பிராக்ல ரெக்கார்ட் பண்ணினோம். அங்க சிம்ஃபனி இசைக் கலைஞர்கள் கிடைப்பாங்க. ஆனா, எந்திரன்ல இன்னும் ஒரு ஸ்டெப் மேல போய், பிராஸ்ங்கற இசைக் குழுவை பயன்படுத்தியிருக்கோம். பாடல்கள் எல்லாமே பிரமாண்டமா பிரமாதமா வந்திருக்கு. லண்டன்ல இருக்கிற பிராஸ் செக்ஷன், என்னோட ஆர்க்கெஸ்ட்ரா ட்ரூப் இவங்கல்லாம் நிறைய ஹெல்ப் பண்ணிருக்காங்க. இதுதவிர நிறைய மாடர்ன் டெக்சர்ஸ் மியூசிக் பண்ணியிருக்கோம். நீங்க எல்லாருமே ரொம்ப ரசிப்பீங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு…”, என்றார்.

திரையுலகம்

ரம்லத்துக்கு பயந்து பலத்த பாதுகாப்பு டன் ஷூட்டிங்கில் பங்கேற்ற நயன்!

பிரபுதேவாவின் மனைவி ரம்லத் மற்றும் பெண்கள் அமைப்புகள் தாக்கக் கூடும் என்ற பயம் காரணமாக, பலத்து பாதுகாப்புடன் விளம்பரப் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் நயன்தாரா. நயன்தாரா-பிரபுதேவா காதல் மிகத் தீவிரமாகி, திருமணத்தில் வந்து நிற்கிறது. திருப்பதி கோவிலில் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்தத் திருமணத்துக்கு சம்மதிக்க ரம்லத்துக்கு ரூ.3 கோடி ரொக்கமும், அண்ணாநகரில் உள்ள வீட்டையும் கொடுத்து சமரசம் செய்து விட்டதாக ஏற்கனவே வதந்தி பரவியது. நயன்தாரா ரூ.85 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லசை பிரபுதேவா மூலம் ரம்லத்துக்கு கொடுத்ததாகவும் கூறப்பட்டது. இதையெல்லாம் ரம்லத் மறுத்துள்ளார். அவர் புகார் அளித்தால் நயன்தாரா, பிரபு தேவா இருவரையும் கைது செய்வோம் என்று போலீசாரும் கூறியுள்ளனர். ரம்லத் புகார் தராவிட்டாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் சங்கங்கள் கூறி வருகின்றன. நயன்தாராவுக்கு கறுப்புக்கொடி காட்டுவோம் என்று ஜான்சிராணி பெண்கள் பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது. இந்த நிலையில் விளம்பர படமொன்றில் நடிப்பதற்காக நேற்று நயன்தாரா சென்னை வந்தார். வழக்கமாகத் தங்கும் பார்க் ஓட்டலை விட்டுவிட்டு, ரகசிய இடத்தில் தங்கிய அவர், கேளம்பாக்கத்தில உள்ள ஒரு ஸ்டுடியோவில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்றார். 3 நாட்கள் இந்த படப்பிடிப்பு நடக்கிறது. சென்னையில் உள்ள பிரபல ஜவுளி விற்பனை நிறுவனம்தான் இந்த விளம்பர படத்தை தயாரிக்கிறது. பெரும் தொகையைப் பெற்றுக் கொண்டு இந்தப் படத்தில் அவர் நடிக்கிறார். காரணம் கடனில் சிக்கியுள்ள பிரபு தேவாவுக்கு உதவுவதற்காக என்று கூறப்படுகிறது. இந்தப் படப்பிடிப்பில் ரம்லத் மற்றும் பெண்கள் சங்கத்தினர் புகுந்து ரகளையில் ஈடுபடலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், நயன்தாராவுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தனியார் செக்யூரிட்டிகள் படப்பிடிப்பை சுற்றி நிறுத்தப்பட்டு உள்ளனர்.

அரசியல்

காமன் வெல்த் அல்ல காங்கிரஸ் "wealth" – இந்தியாவின் அவமானம்.

சர்வதேச நாடுகளுக்கு இந்தியாவின் செல்வாக்கை நிரூபித்துக் காட்டும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்ட காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளால், நாட்டின் ஒட்டுமொத்த கவுரவத்துக்கும் பலத்த அடி விழுந்துள்ளது. போட்டி ஏற்பாடுகளில் ஊழல், கட்டுமானப் பணிகளில் முறைகேடு, டெங்கு பீதி, விளையாட்டு கிராமத்தில் சுகாதாரக் கேடு, ஸ்டேடியத்தின் கூரை இடிந்து விழுந்தது, நடை மேம்பாலம் இடிந்து விழுந்தது, பயங்கரவாத மிரட்டல் என, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், சர்ச்சை போட்டிகளாக மாறிப் போய் விட்டன.பாதுகாப்பு ஏற்பாடுகளையும், சுகாதாரக் குறைபாட்டையும் காரணம் காட்டி, நியுசிலாந்து, கனடா, ஸ்காட்லாந்து, அயர்லாந்து போன்ற நாடுகள், போட்டியில் பங்கேற்க தயக்கம் தெரிவித்துள்ளன. விளையாட்டு கிராமத்துக்கு வந்து பார்த்த, இந்த நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், அங்கு தெருநாய்கள் சுதந்திரமாக திரிவதையும், கழிவறைகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதையும் கண்டு, திகைத்துப் போயினர். இவர்களில் சிலர், “ஆளைவிட்டால் போதும்’ என, மறுபேச்சு எதுவும் இல்லாமல், தங்கள் நாடுகளுக்கு பறந்து விட்டனர். கப்பலேறும் மானம் : காமன்வெல்த் கிராமத்தில் வீரர்கள் தூங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள படுக்கைகளில் தெருநாய்கள் குதித்து விளையாடியதற்கான தடயங்களையும், தெருநாய்கள் ஆங்காங்கே சுற்றித் திரிவதையும், கழிவறைகள் சுகாதாரமற்ற வகையில் அழுக்கு படிந்து காணப்படுவதையும் காண முடிகிறது. போதாக்குறைக்கு, சில வெளிநாட்டு “டிவி’ சேனல்கள், இந்த காட்சிகளை அடிக்கடி ஒளிபரப்பி, நம் மானத்தை வாங்கினர். “வரும் 2020ல் இந்தியா வல்லரசு நாடாகி விடும்’ என்ற அரசியல்வாதிகளின் “பில்டப்’களை அடித்து நொறுக்கும் வகையில் அமைந்து விட்டது, காமன்வெல்த் போட்டிகளில் நடக்கும் குளறுபடிகள். காமன்வெல்த் போட்டிகள் : காமன்வெல்த் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் சார்பில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. கடந்த 2006ல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் போட்டிகள் நடந்தன. இதை தொடர்ந்து, தற்போது டில்லியில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.இந்த போட்டிகளில் 71 நாடுகளை சேர்ந்த 8,500 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவில் காமன்வெல்த் போட்டிகள் நடப்பது, இதுதான் முதல் முறை. ஆசியாவில் இரண்டாவது முறையாக இந்த போட்டிகள் நடக்கின்றன. கடந்த 1998ல் கோலாலம்பூரில் காமன்வெல்த் போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு நாட்டுக்கும் ரூ.48 லட்சம் : இந்த காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்காக, இந்தியா, கனடா நாடுகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் தலா 48 லட்ச ரூபாய் தரப்படும் என்றும், வீரர்களுக்கான விமான டிக்கெட், தங்குமிடம், உணவு, போக்குவரத்து ஆகியவற்றுக்கான செலவையும் ஏற்றுக் கொள்வதாக இந்தியா உறுதி அளித்தது.இதையடுத்து, காமன்வெல்த்தில் அங்கம் வகிக்கும் பல நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக ஓட்டளித்தன. இறுதியில் 46-22 என்ற ஓட்டு வித்தியாசத்தில் காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா வெற்றி பெற்றது. செலவு எவ்வளவு?இந்தியாவில் நடக்கும் போட்டிக்காக 11 ஆயிரத்து 494 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும், இதற்காக 36 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. போட்டிகளை நடத்துவதற்காக கட்டமைப்பு பணிகளை செய்வது, விளையாட்டு அரங்கங்களை அமைப்பது மற்றும் புதுப்பிப்பது ஆகியவற்றுக்காக 27 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த செலவில் பெரும்பகுதி, “ஊழலில் கரைந்து விட்டதாக’ மீடியாக்கள் அம்பலப்படுத்தின. எங்கெங்கு காணினும் ஊழல் : தொடர் ஜோதி ஓட்ட ஏற்பாடுகள், போட்டி ஒளிபரப்பு உரிமை, விளம்பரதாரர் உரிமை என, ஆரம்பத்திலேயே போட்டி ஏற்பாடுகளில் பெருமளவில் ஊழல் நடந்ததாக தகவல் வெளியானது. இப்போட்டிக்காக, கடந்த ஆண்டு தொடர் ஜோதி ஏற்றி, ஓட்டத்தை தொடங்கி வைத்த பிரிட்டன் ராணியே, தனது கவலையை தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது. ஆனாலும், அதிகாரிகள் அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை.டில்லியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது, விளையாட்டு அரங்கங்களை புதுப்பிப்பது, நடை மேம்பாலங்களை அமைப்பது, வீரர்களுக்கு தேவையான விளையாட்டு கருவிகளை வாங்குவது என, எங்கெங்கும் ஊழல் கரை கடந்தது. குறிப்பாக, மிகவும் விலை குறைந்த பொருட்களை, அதிக விலைக்கு வாங்கியதாக கணக்கு காட்டப்பட்டது. கட்டுமானப் பணிகளிலும் இதே நிலை தான். தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்தியதால், நடை மேம்பாலம் இடிந்து விழுந்தது. ஊழல் கண்காணிப்பு ஆணையம் அதிரடி : காமன்வெல்த் போட்டிகளில் நடந்த ஊழல் குறித்து தினமும் செய்திகள் வெளியானதும், மத்திய ஊழல் கண்காணிப்பு துறை ஆணையம் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது. காமன்வெல்த் போட்டிகளின் 14 திட்டப் பணிகளில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டியது.குறிப்பாக, திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தம் அளித்தது உள்ளிட்ட பணிகளில் முறைகேடு நடந்ததாக அறிக்கை தாக்கல் செய்தது. இதன் தொடர்ச்சியாக, போட்டி ஏற்பாட்டு குழுவின் இணை இயக்குனர் பொறுப்பில் இருந்த தர்பாரி என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.டென்னிஸ் கோர்ட் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம், போட்டி ஏற்பாட்டு குழுவின் பொருளாளர் அனில் கண்ணாவின் மகனுக்கு அளிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து அனில் கண்ணா ராஜினாமா செய்தார். காமன்வெல்த் பணிகளில், குழந்தை தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்படுவதாக, பிரிட்டன் பத்திரிகை ஒன்று, புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டு, தன் பங்கிற்கு இந்தியாவின் மானத்தை கப்பலேற்றியது. வெள்ளம் : ஊழல் ஒரு பக்கம், போட்டிகளுக்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்த, மறுபக்கம் இயற்கையும் தன் பங்கிற்கு விளையாடியது. அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பெய்த வரலாறு காணாத மழையால், டில்லியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட மைதானங்கள் சேதமாயின. சாலைகள், மேம்பாலங்கள் ஆகியவற்றின் கட்டுமானத்துக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களும், தண்ணீரில் மிதந்தன. வீரர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டு கிராமம், வெள்ள நீர் சூழ்ந்து தீவு போல் காட்சியளித்தது. அங்கு தேங்கியிருந்த தண்ணீரால், கொசுக்கள் உருவாகி, டெங்கு, மலேரியா போன்ற நோய்களை உருவாக்கி, போட்டி ஏற்பாட்டாளர்களை கதறடித்தன. பயங்கரவாதம் : இந்தியாவுக்கு நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்து கொண்டிருந்த பயங்கரவாத பிரச்னையும், காமன்வெல்த் போட்டிகளில் ஊடுருவியது. போட்டிகள் துவங்குவதற்கு சில நாட்களே உள்ள சூழ்நிலையில், டில்லி ஜும்மா மசூதி அருகே மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், தைவான் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இருவர் படுகாயம் அடைந்தனர். இந்தியன் முஜாகிதீன் அமைப்பிடம் இருந்து, காமன்வெல்த் போட்டிகளுக்கு மிரட்டல் விடுத்து, இ-மெயிலும் வந்தது. இதை பார்த்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், தங்களால் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு பீதியை கிளப்பி விட்டு, புண்ணியம் தேடிக் கொண்டன. காமன்வெல்த் போட்டிகள் கூட்டமைப்பின் தலைவர் மைக்கேல் பென்னல் தலைமையிலான குழுவினர், விளையாட்டு கிராமத்தை சுற்றிப் பார்த்து விட்டு, அதிருப்தி தெரிவித்தனர். அடி மேல் அடி :இதுபோன்ற பிரச்னைகளால் டில்லி காமன்வெல்த் போட்டிக்கு, தொடர்ந்து அடி மேல் அடி விழுந்து கொண்டிருந்தது. விளையாட்டு வீரர்களிடம் பீதி ஏற்பட்டு, சிலர் போட்டிகளை புறக்கணிப்பதாகவும் அறிவித்தனர். ஆனால், இதற்கெல்லாம் சாதாரண மக்கள் கவலைப்பட்ட அளவுக்கு கூட, விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளும், பொறுப்பாளிகளும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. “சர்வதேச அளவிலான ஒரு போட்டியை ஏற்பாடு செய்யும் போது, இதுபோன்ற குறைபாடுகள் எல்லாம் சகஜம்’ என, “குப்புற விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டாத கதையாக’ பேசித் திரிகின்றனர். தங்கள் பாக்கெட் நிறைந்தால் போதும் என்ற நிலை தான் அவர்களுக்கு. பிரதமர் தலையிட்டும் தீர்வு இல்லை : பிரச்னை பெரிதானதும், இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாக தலையிட்டார். பிரதமர் வீட்டில் இதுகுறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மத்திய அமைச்சர்கள் ஜெய்பால் ரெட்டி, கில், டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஐ.மு., கூட்டணி ஒருங்கிணைப்பாளர் சோனியாவும் ஆலோசனைகளை வழங்கினார்.இதன்படி, போட்டிக்கான பணிகளை கண்காணிக்கும்படி, மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் இடங்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார். இருந்தும், பிரச்னை தீரவில்லை. அரசு என்ன செய்ய வேண்டும்? நம் நாட்டில் திறமையான முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களை கண்டறிந்து, போட்டி ஏற்பாடுகளை அவர்கள் கையில் ஒப்படைப்பதன் மூலம், நம் நாட்டின் மதிப்பு, சர்வதேச அளவில் கெடாமல் பார்த்து கொள்ளலாம். ஆனால், அதற்கு அரசுக்கு மனம் வர வேண்டும்.மேலும், போர்க்கால அடிப்படையில் விளையாட்டு கிராமத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போட்டி துவங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அரசு இயந்திரம் இதற்காக முடுக்கி விடப்பட வேண்டும். சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை நிரூபிக்கும் பிரச்னை என்பதால், இதற்காக ராணுவத்தை கூட பயன்படுத்தலாம். இல்லையெனில், எதிர்காலத்தில் இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான விளையாட்டு போட்டிகளை மட்டுமல்ல, வேறு எந்த நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு, சர்வதேச நாடுகள் தயக்கம் காட்டும் சூழ்நிலை உருவாகி விடும். முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்காவிட்டால், சர்வதேச நாடுகளின் முன், நாம் தலைகுனிந்து நிற்கும் சூழல் உருவாகும். எது எப்படியோ, போட்டிகள் சிறப்பாக நடந்து முடிவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து விடுவோம். இந்தியாவால் முடியாதது இல்லை : சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்துவது என்பது, இந்தியாவுக்கு புதிய விஷயம் அல்ல. கடந்த 1951 மற்றும் 1982 ஆகிய ஆண்டுகளில் ஆசிய விளையாட்டு போட்டிகள் இங்கு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட வரலாறு உண்டு. எனவே, வெறும் 12 நாட்கள் மட்டுமே நடக்கவுள்ள காமன்வெல்த் போட்டிகளை நடத்துவது, இந்தியா போன்ற மனிதவளம் கொண்ட நாட்டுக்கு சிரமமான காரியமே அல்ல. ஆனால், போட்டி துவங்கியதில் இருந்து, முடிவது வரை அனைத்திலும் பிரச்னை என்றால், அடிப்படையிலேயே கோளாறு இருக்கிறது என்று தானே அர்த்தம்! “கவுன் டவுண்’ களேபரம் : போட்டிகள் துவங்குவதற்கு சில நாட்களே உள்ள கடைசி நேரத்தில் நடந்த “மெகா’ குளறுபடிகள்: * ஜவகர்லால் நேரு அரங்கில் 961 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. போட்டி துவங்குவதற்கு 11 நாட்கள் இருக்கும் போது, அரங்கின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இங்குள்ள நடைபாதை மேம்பாலமும் இடிந்து விழுந்தது. * காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தின் பணிகள் 1,000 கோடி ரூபாய் செலவில் நடந்தன. வீரர்கள் வரத் துவங்கிய நேரத்தில் இங்கு சுகாதாரக் கேடு ஏற்பட்டது. * இந்திரா காந்தி விளையாட்டு வளாகம், 669 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்டது. இங்கு சைக்கிள் போட்டி நடத்துவதற்காக

அரசியல்

"கற்புக்கரசி " குஷ்புவினால் கலைஞர் வீட்டுக்குள் குடும்ப சண்டை

‘‘சில மாதங்களாக அடங்கிக்கிடந்த தி.மு.க.வின் உட்கட்சி பூசல்களும் குடும்ப மோதல்களும் அப்பட்டமாக வெளிப்படும்’’ என்பதுதான் எல்லாதரப்பு அரசியல்வாதிகளும் முணுமுணுக்கும் செய்தியாக இருக்கிறது. திடுமென தி.மு.க.வில் புகைய ஆரம்பித்திருக்கும் புகைச்-சலுக்கு காரணம் நாகர்கோவிலில் நடந்த முப்பெரும் விழா. இந்த விழாவில் அழகிரியின் பெயர் அழைப்பிதழில் முதலில் அச்சேரவில்லை. அவர் ஆவேசப்பட்டதும், அதே விழாவில் குஷ்புவுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமும் தி.மு.க.வில் மீண்டும் குடும்ப மோதலுக்கு இழுத்துச் சென்றுள்ளது. ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் தி.மு.க.விற்கு கொண்டாட்ட மாதம்தான். திராவிட பாரம்பரியத்தின் அச்சாணிகளான பெரியார், அண்ணா ஆகியோரின் பிறந்த தினங்களோடு, கட்சி தொடங்கிய நாள் என மூன்று விழாக்களையும் இணைத்து, முப்பெரும் விழா எடுத்து வருகிறது தி.மு.க. இந்த முப்பெரும் விழாவில் எப்போதும் ஒரு மெசேஜ் இருக்கும். இந்த முறை கிடைத்த மெசேஜ்… கலைஞர் தனது வாரிசுகளின் மூக்குடைத்துவிட்டு, குஷ்புவுக்கு ராஜ மரியாதை செய்திருப்பதுதான். அந்த விஷயத்துக்கு இறுதியில் வருவோம். நாகர்கோவில் தேர்வான ரகசியம்! இந்த வருடம் முப்பெரும் விழா பற்றிய பேச்சுக்கள் கிளம்பியதுமே முதல்வர் கருணாநிதியிடம், ‘‘கோவையில் செம்மொழி மாநாடு நடத்திவிட்டீர்கள். திருச்சியில் திகைப்பான கூட்டம் கூட்டி விட்டீர்கள். சமீப காலங்களில் வட மாவட்டங்களில்தான் கட்சியின் பெரிய விழா எதுவும் நடக்கவில்லை. அதனால் திருவண்ணாமலையில் முப்பெரும் விழாவை நடத்த வேண்டும்’’ என கோரிக்கை வைத்திருந்திருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு. அந்த கருத்தை ஸ்டாலினும் ஆதரித்திருக்கிறார். முதல்வர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ‘‘தமிழகத்தின் தென் கோடியை நாம் மறந்து விட்டோம். இம்முறை நாகர்கோவில்தான். நான் அங்கு சென்றும் வெகு நாட்களாகிறது’’ என்று சொல்லி நாகர்கோவிலை விழா நகரமாக தேர்வு செய்தாராம். ஆவேசத்துக்கு அச்சாரம் அழைப்பிதழ்! நாகர்கோவிலில் முப்பெரும் விழா என்று முடிவானதுமே, அதற்கான மொத்த ஏற்பாடுகளையும் செய்யும்படி சுற்றுலா மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சரான சுரேஷ்ராஜனிடம் ஒப்படைப்பது என்று முடிவு செய்தார் கலைஞர். இதற்குள் அழகிரியின் காதுகளுக்கு முப்பெரும் விழா செய்திகள் போனது. உடனே ஆவேசமான அழகிரி, ‘‘தென்மண்டலத்தில் விழா நடத்துவதைக்கூட ஒரு செய்தியாகத்தான் என்னிடம் சொல்கிறீர்கள். என்னிடம் கலந்தாலோசிக்க மாட்டீர்களா?’’ என அப்போதே முதல்வரிடம் ஆவேசப்பட்டாராம். இருந்தாலும், விழா நடக்கட்டும் என்று அமைதியாக இருந்தார் அழகிரி. இதற்கிடையில், விழாவுக்கான அழைப்பிதழ் தயாராகி வந்தது. அதில் தன் பெயர் இல்லை என்றதும், கொதிக்க ஆரம்பித்து விட்டார். தலைவர் கலைஞர், பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர்களான துரைமுருகன், பரிதி இளம்வழுதி, சற்குணபாண்டியன் ஆகியோரின் பெயர்களோடு லோக்கல் அமைச்சரான சுரேஷ்ராஜன் ஆகியோரது பெயர்கள் மட்டும்தான் அழைப்பிதழில் இடம்பெற்றிருந்தது. ‘‘திட்டமிட்டு என்னை அவமானப் படுத்துகிறார்கள். விழாவை நல்லா நடத்திட்டுப் போகட்டும். ஆனால், சத்தியமாக நாகர்கோவில் பக்கம் தலைவைத்துக்கூட படுக்கமாட்டேன்’’ என்று தனது தாயிடமும், சகாக்களிடமும் தெரிவித்துவிட்டார். அழகிரியின் கோபம், ஆவேசமாக மாறிய விஷயம் கலைஞருக்கு எட்டியது. முப்பெரும் விழா தென் மண்டலத்தில் நடக்கிறது, அதில் அழகிரி பெயர் இல்லையென்றால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை அறியாதவர் அல்ல கலைஞர். ஆனாலும், அழகிரியின் பெயரை கலைஞர் ஏன் தவிர்த்தார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. அழகிரியின் கோபம் குறித்து, செப்.18&ம் தேதி காலை முதலே விவாதிக்கத் தொடங்கிவிட்டார் கலைஞர். ‘என்னய்யா… அவன் கோவிச்சிக்கிறான். அமைப்புச் செயலாளர் பெயர்களை இதுவரை முப்பெரும் விழாவில் போட்டதே கிடையாது. அப்படி போட்டால், அழகிரியோடு டி.கே.எஸ்.இளங்கோவன், பி.வி.கல்யாணசுந்தரம் பெயரையும் போட வேண்டுமே’ என்றெல்லாம் விவாதம் தொடங்கி, கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார் கலைஞர். அவரது பெயரை போட்டுவிடுவது என்று முடிவு செய்து, அமைச்சர் துரைமுருகன் மூலம், அழகிரிக்கு தெரியப்படுத்தி-விட்டார் கலைஞர். அழகிரி பெயர் சேர்க்கப்பட்ட விளம்பரம் தயா-ராகி முரசொலி இதழ் அச்சாகிக் கொண்-டிருந்தது. அழகிரியின் புயல் ஓய்ந்துவிடும் என்று கலைஞர் நினைத்துக் கொண்டே, சி.ஐ.டி. காலனி வீட்டுக்குச் சென்றார். அங்கே, அந்த விழா அழைப்பிதழில் கனிமொழி பெயரும் இடம் பெற வேண்டும் என்று ராசாத்தியம்மாள் போர்க்கொடி தூக்க, கலைஞருக்கு நெருக்கடி தொடங்கியது. ஒரு மணி நேரம் விவாதம் நடந்து முடிந்ததும், முரசொலிக்கு சென்ற விளம்பரத்தில் மாற்றம் செய்யும்படி உத்தரவிட்டார் கலைஞர். அழைப்பிதழில், அழகிரியின் பெயரோடு, கனிமொழி பெயரைச் சேர்த்ததுடன், குஷ்பு சுந்தர் பெயரையும் சேர்க்கச் சொன்னார் கலைஞர். அங்கேயும் ஒரு சுவாரஸ்ய திருப்பம் ஏற்பட்டது. சென்னைக்கு மட்டும் அடிக்க வேண்டிய முரசொலி மட்டுமே பாக்கி இருந்தது. அதனால் சென்னை பதிப்பு முரசொலி யில் மட்டுமே, கனிமொழி பெயரும், குஷ்பு சுந்தர் பெயரும் இருந்தது. முரசொலியின் இதர பதிப்புகளில் இந்த இருவரின் பெயர் இல்லை. மற்ற நாளிதழ்களில் திருத்தப்பட்ட அழைப்பிதழில் அழகிரி, கனிமொழி, குஷ்பு சுந்தர் பெயர்களும் இருந்தன. 19&ம் தேதி விளம்பரம் வந்த அன்றுதான், வாரிசுகள் அத்தனை பேரையும் கலைஞர் மூக்குடைத்தது அம்பலமாகி இருந்தது. ‘ ஆளாளுக்கு என் பேரை சேருங்கன்னு டார்ச்சர் செய்யறீங்களா… இருங்க என் வேலையை நான் காட்டுறேன்’ என்று கலைஞர் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் மறுநாள் தான் தெரிந்தது. குஷ்பு பெயர் வந்ததும் கடும் வெறுப்பில் மூழ்கியவர் கனிமொழி. கட்சிக்காக ஊர் ஊராக ஓடித்திரியும் தனது பெயரை சேர்க்க வேண்டி தாயார் கோரிக்கை வைத்தால், தனது இடத்திற்கு சமமாக குஷ்புவைக் கொண்டு வந்ததை கனிமொழியால் ஜீரணிக்க முடியவில்லை. இருந்தும் தனது அதிருப்தியை, கலைஞரிடம் காட்டாமலேயே, நாகர்கோவில் சென்று வந்தார். குஷ்புவின் பெயர் அச்சில் ஏறிவிட்டது என்ற செய்தி தன்னை எட்டியதும், ஸ்டாலின் தவிப்புக்குள்ளானார். அழகிரியின் பெயரை போடுவதற்கு எப்போதுமே, தன்னால் தான் பிரச்னை ஏற்படும். இந்த முறை குஷ்புவின் மூலமாக குடும்பத்திற்குள் பிரச்னை வெடிக்கப்போகிறதே… அண்ணனை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று அவர் தவித்துக் கொண்டிருந்தார். இவர்கள் இருவரைவிட உச்சக்கட்ட கடுப்புக்கு ஆளானவர் அழகிரிதான். பெயர் இல்லையே என்று மேலோட்டமாக கோபம் காட்டிய அழகிரி, திருத்தப்பட்ட அழைப்பிதழில் இருந்த பெயர்களைக் கண்டதும், கொதித்துவிட்டார். எடுபடாத தயாளு சமாதானம்! பல தரப்பில் இருந்து சமாதானம் செய்தும் அழகிரி மசியவில்லை. பின்னர் துரைமுருகன் பேசியிருக்கிறார். ‘‘நான் எம்.ஜி.ஆர் படம் பார்த்துக்கிட்டிருக்கேன். என்னை டிஸ்டர்ப் செய்யாதீங்க’’ எனச் சொல்லி தொடர்பை கட் செய்துவிட்டாராம் அழகிரி. இந்நிலையில் அழகிரியை சமாதானப்-படுத்த தயாளு அம்மாளைக் கொண்டு வந்தார்கள். வழக்கமாய் பேசும் அதே உருகிய குரலுடன் அழகிரியின் லைனுக்கு போயிருக்கிறார் தயாளு. ‘‘எல்லாரும் ஒண்ணாயிருக்கறப்ப, நீ மட்டும் ஏம்பா முரண்டு பிடிக்கிறே. தேர்தல் வர்ற நேரத்துல, நீ இப்படி செய்யறது அப்பாவுக்கு பிடிக்கலைப்பா. எல்லாத்தையும் மறந்துட்டு என் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து விழாவுக்கு போகணும்..’’ என உரிமை கலந்து உத்தரவு போட்டாராம். ‘‘அழைப்பிதழில் என் பெயர் போடாததே பரவாயில்லை. விளம்பரத்துல என் பெயரை போடறேன்னு சொல்லிட்டு குஷ்பு பெயருக்கு மேல போட்டிருக்கீங்க. குஷ்புவுக்கு சமமா நான்? கட்சிக்குள்ள தலைவருக்கு அடுத்து ஸ்டாலின்னு முடிவு பண்ணிட்டீங்க. ஸ்டாலினுக்கு அடுத்து கூட நான் இல்லேன்னா, என்னை எந்த இடத்துலதான் வைச்சிருக்கீங்க?’’ என்று கேட்டுவிட்டு, போனை ஆஃப் செய்துவிட்டார் அழகிரி அண்ணன் நாகர்கோவில் செல்லவில்லை என்றதும், அவரது ஆதரவாளர்கள் அங்கே குவியத்தொடங்கினர். ‘‘இந்தக் கட்சிக்காக எவ்வளவு உழைக்கிறேன். வர்ற சட்டமன்ற தேர்தலுக்காக இப்ப இருந்தே நாயா பாடுபடறேன். பெங்களூருல இருந்தும், டெல்லியில இருந்தும் ஆட்களை கூப்பிட்டு வந்து, இப்பவே சர்வே எடுத்துப் பார்க்கறேன். தென் மண்டலம் முழுவதும் இப்பவே பூத் கமிட்டி அமைக்கச் சொல்லியிருக்கேன். இப்படி நான் உழைக்கற உழைப்பு மாதிரி யார் உழைக்கறாங்க? அடுத்து வேற ஆட்சி வந்தால், என் நிலைமை என்னாகும்? எனக்கு என்ன பாதுகாப்பு இருக்கு? இன்னும் ஆறு மாசத்துல தேர்தல் வரட்டும். அப்ப நான் யாருன்னு காட்டறேன்’’ என ஆவேசத்தில் தன்னுடைய வருத்-தங்கள் அனைத்தையும் தன் வீட்டில் குவிந்-தவர்களிடையே கொட்டினாராம். இந்த விஷயங்கள் அப்படியே கலைஞரின் காதுக்கும் போயிருக்கிறது. இதற்கிடையில், முப்பெரும் விழா நாளில் நான் மதுரையில் இல்லாமல் இருப்பது போல் வெளியே தெரியக்-கூடாது. மதுரையில் இருந்து கொண்டுதான் விழாவுக்கு வரவில்லை என எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே, தொகுதி மேம்பாட்டு நிதியில் மதுரையில் நடைபெறும் சில வேலைகளை தனது படை, பரிவாரங்கள் சூழ சென்று பார்வை-யிட்டாராம் அழகிரி. ‘‘விழாவைப் புறக்கணித்துவிட்டு அழகிரி, இப்போதைக்கு அமைதியாக இருந்தாலும், அடுத்தடுத்து அவர் ஆற்றப் போகும் காரியங்கள் கட்சிக்குள் பெரும் புயலை வீசச் செய்யும்…’’ என்று அழகிரி ஆதரவாளர்கள் மதுரையில் இருந்து விடுக்கும் செய்திகளால், தி.மு.க. தலைவர்கள் சிலர் அதிர்ந்து போயிருக்கிறார்கள். கோபாலபுரத்தில் வழக்கமாக உள்ளூர் புயல்தான் வீசும். நீர் அடித்து நீர் விலகாது என்ற வகையில் அந்த புயல்கள் புஸ்வாண-மாகிவிடும். வடஇந்தியாவிலிருந்து வங்கக்-கரைக்கு வந்திருக்கும் குஷ்பு புயலால், கோபாலபுரம் குடும்பத்தில் என்ன கலவரத்தை ஏற்படுத்தும் என்பதைதான் தி.மு.க.வின் தொண்டர்கள் திகிலாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம், முப்பெரும் விழாவில் கட்சியில் சேர்ந்து ஆறு மாதங்கள் கூட ஆகாத ஒரு நடிகைக்கு கொடுக்கப்பட்ட ராஜமரியாதை, தி.மு.க. முக்கியஸ்-தர்களை மட்டு-மின்றி, மூன்று வாரிசுகளுமே வெவ்-வேறு வகைகளில் சங்கடத்திற்கு ஆளாகியிருக்-கிறார்-கள் என்பதும் மறுக்க முடியாத செய்தியாகும். ஆக, முப்பெரும் விழாவில் இறுதியில், தி.மு.க. தொண்டனுக்கு கிடைத்திருப்பது ஒரே ஒரு செய்திதான்… தனது வாரிசுகளை கட்டுப்படுத்த முடியாமல் அல்லது அவர்களுக்கு பாடம் கற்பிப்பதாக நினைத்து குஷ்புவை தாங்கிப்பிடித்திருக்கிறார் கலைஞர். ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு வாரிசை சமாளிக்க, அந்தந்த நேரத்தில் ஒரு அஸ்திரம் எடுப்பார். மூன்று வாரிசுகளுக்கும் ஒரே நேரத்தில் நெருக்கடி கொடுக்க, கலைஞர் எடுத்த அஸ்திரம்தான் குஷ்பு! இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை அழகிரியின் அடுத்த மூவ்தான் முதலில் எடுத்துக்காட்டும்!

அரசியல், முதன்மை செய்திகள்

பிரபாகரன் தலைமையில் மீண்டும் ஈழப்போர் – நெடுமாறன்

மீண்டும் ஈழத்தில் போர் வரும். அந்தப் போருக்கு பிரபாகரன் தலைமை ஏற்பார். அந்தப் போருக்காக அவர் தயாராகி வருகிறார் என்று கூறியுள்ளார் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன். தூத்துக்குடியில் நடந்த தமிழக மீனவர்களின் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொண்டு நெடுமாறன் பேசுகையில், 1983ம் ஆண்டு முதல் சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊனமாகியுள்ளனர். மீனவர்களின் படகுகள் மற்றும் சொத்துக்களை கடலில் மூழ்கடித்துள்ளனர். பாதிக்கப்படும் மீனவர்கள் தமிழர்கள் என்பதால் இந்திய கடற்படையும் அக்கறை காட்டுவதில்லை. நமது வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்கின்றனர். அதனால் எதுவும் செய்ய முடியாது என்கிறார். சிங்கள கடற்படையினர் ராமேசுவரம் அருகில் உள்ள மீனவர் கிராமத்தை தீயிட்டுக் கொளுத்தினர். மத்திய, மாநில அரசுகள் இதைக் கண்டு கொள்வதில்லை. எனவே, தமிழக மீனவர்கள் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை தங்கள் பாதுகாப்புக்காக வைத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது மீனவர்கள் பிரச்சனை மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரச்சனை. மீண்டும் ஈழப்போர் வரும். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் நலமாக, பத்திரமாக உள்ளார். அவர் அடுத்த கட்ட ஈழப்போருக்கு ஆயத்தமாகி வருகிறார் என்றார் நெடுமாறன்.

Scroll to Top