செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்த ஷேவாக்!…

கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்த ஷேவாக்!…

கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்த ஷேவாக்!… post thumbnail image
பெங்களூர்:-பெங்களூர் அணியில் இடம் பெற்றுள்ள வெஸ்ட்இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல். சிறந்த அதிரடி வீரரான அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சாதனைகள் பல படைத்துள்ளார். ஒரு ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த வீரர், அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பவுண்டரி, சிக்சர் இரண்டையும் சேர்த்து அதிகமாக அடித்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக கிறிஸ் கெய்ல் இருந்தார். அவர் 70 ஆட்டத்தில் 232 பவுண்டரி, 200 சிக்சர் என்று 432 முறை பந்தை எல்லை கோட்டுக்கு வெளியே அடித்து இருந்தார்.

கிறிஸ் கெய்லின் இந்த சாதனையை கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் ஷேவாக் முறியடித்தார். ஷேவாக் 99 ஆட்டத்தில் 332 பவுண்டரி, 106 சிக்சர் என 438 முறை பந்தை எல்லை கோர்ட்டுக்கு விரட்டி உள்ளார். ஒட்டுமொத்த 20 ஓவர் போட்டியில் ஷேவாக் 4000 ரன்னை கடந்தார். இந்திய வீரர்களில் 7–வது வீரர் ஆவார். இதற்கு முன்பு ரெய்னா, ரோகித்சர்மா, காம்பீர், வீராட்கோலி, டோனி, ராபின் உத்தப்பா ஆகியோர் 4 ஆயிரம் ரன்னை கடந்து உள்ளனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக ஸ்டிரைக் சைட் வைத்திருப்பவர் ஷேவாக் தான். அவரது ஸ்டிரைக் ரைட் 156.58 ஆகும். ஷேவாக் முதலில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார். தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாடி வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி