செய்திகள்,திரையுலகம் ரகசிய கூட்டம் கூட்டிய நடிகர் விஷால்!…

ரகசிய கூட்டம் கூட்டிய நடிகர் விஷால்!…

ரகசிய கூட்டம் கூட்டிய நடிகர் விஷால்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஷால் ஏற்கனவே திருட்டு சி.டி. விற்றவர்களை போலீசில் பிடித்து கொடுத்து பரபரப்பு ஏற்படுத்தினார்.நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி தன்னை இழிவாக பேசியதாக குற்றம் சாட்டினார். நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுவது பற்றியும் கருத்துக்கள் வெளியிட்டார்.

நடிகர் சங்கத்துக்கு அடுத்த மாதம் இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்றும் பொறுப்பு கொடுத்தால் ஏற்றுக் கொள்வேன் என்றும் அறிவித்து இருந்தார். இந்நிலையில் தன் ஆதரவு நடிகர்களை அழைத்து விஷால் ரகசிய கூட்டம் நடத்தி உள்ளார். விஷால் வீட்டில் இக்கூட்டம் நடந்துள்ளது. நடிகர்கள் நாசர், ஆனந்தராஜ், பூச்சி முருகன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று உள்ளனர். பல்வேறு விஷயங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி