செய்திகள்,திரையுலகம் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாகிறாரா பிரியங்கா சோப்ரா?…

நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாகிறாரா பிரியங்கா சோப்ரா?…

நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாகிறாரா பிரியங்கா சோப்ரா?… post thumbnail image
சென்னை:-நடிகர் சூர்யா தற்போது ‘மாஸ்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பாலிவுட்டில் பிரபல தொழிலதிபரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான நந்திதா சின்ஹா எடுக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை நந்திதா சின்ஹாவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, எங்களுடைய டோட்டல் பிரசென்டேஷன் டிவைசஸ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்கவுள்ளார். அதுமட்டுமல்லாமல், இப்படத்தை அவருடைய 2டி எண்டர்டெயின்ட் நிறுவனம் மூலம் இணைந்து தயாரிக்கவும் உள்ளார்.
இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்க பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தமிழ், தெலுங்கில் இப்படத்தை முதலில் எடுத்துவிட்டு, பிறகு இந்தியிலும் எடுக்கவுள்ளோம் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி