செய்திகள்,திரையுலகம் ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் தலைப்பு தட்டுப்பாடு!…

ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் தலைப்பு தட்டுப்பாடு!…

ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் தலைப்பு தட்டுப்பாடு!… post thumbnail image
ஹாலிவுட்:-தமிழ் படங்களுக்குதான் அடிக்கடி டைட்டில் பிரச்னை வருகிறது. ஒருவர் தலைவன் என்ற வைத்தால் இன்னொருவர் தலைவா என்று வைக்கிறார். இருக்கு ஆனால் இல்லை என்று ஒருவர் தலைப்பு வைத்தால், இல்லை ஆனால் இருக்கு என்று இன்னொருவர் தலைப்பு வைப்பார். தலைப்பு பிரச்னை கோர்ட் வரைக்கும் கூட போகும். நோகாமல் நொங்கு திங்கிற மாதிரி ஹிட்டான தலைப்புகளை வைத்துக் கொள்கிறார்கள். பாயும்புலி, காக்கி சட்டை, நான் சிவப்பு மனிதன் இப்படி.

தற்போது ஹாலிவுட் படங்களுக்கும் தலைப்பு பிரச்னையா என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரபல ஹாலிவுட் ஸ்டூடியோவான மார்வெல், சூப்பர் ஹீரோ படங்களை தயாரிக்கும். தற்போது தான் உருவாக்கிய அத்தனை சூப்பர் ஹீரோக்களையும் ஒரே படத்தில் நடிக்க வைத்து அவெஞ்சர் என்ற படத்தை வெளியிட்டது. அது வெற்றி பெற்றதும் அதன் அடுத்த பாகத்தை அவெஞ்சர் 2 ஏஜ் ஆஃப் அல்ட்ரான் என்ற பெயரில் 24ந் தேதி வெளியிடுகிறது. அதற்கு முன்னதாக வருகிற 17ந் தேதியும் அவெஞ்செர் கிரிம் என்ற பெயரில் ஒரு படம் வெளிவருகிறது. இரண்டு படங்களுமே தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி