செய்திகள்,திரையுலகம் ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகர் கார்த்தி!…

ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகர் கார்த்தி!…

ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகர் கார்த்தி!… post thumbnail image
சென்னை:-பலத்த எதிர்ப்புகளிடையே கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் ‘கொம்பன்’. கிராமத்து பின்னணியில் வெளிவந்த இந்த படம் வெளிவருவதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த தடைகளை எல்லாம் மீறி இந்த படம் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எதிர்பார்த்த வசூலையும் வாங்கிக் குவித்துள்ளது.

இந்நிலையில், இன்று படக்குழுவினர் இந்த படத்தின் வெற்றி விழாவை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, இயக்குனர் முத்தையா, தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். படத்தை பெரிய வெற்றியடைய வைத்த அனைத்து ரசிகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி