அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் சுற்றுலா தளங்களாக மாறிய பிரதமர் மோடி பிறந்த வீடு, டீ விற்ற ரெயில் நிலையம்!…

சுற்றுலா தளங்களாக மாறிய பிரதமர் மோடி பிறந்த வீடு, டீ விற்ற ரெயில் நிலையம்!…

சுற்றுலா தளங்களாக மாறிய பிரதமர் மோடி பிறந்த வீடு, டீ விற்ற ரெயில் நிலையம்!… post thumbnail image
அகமதாபாத்:-பிரதமர் மோடி பிறந்த வீடு, அவர் டீ விற்ற ரெயில் நிலையம் ஆகியவை தற்போது பிரபலமான சுற்றுலா தளங்களாக மாறியுள்ளது. குஜராத் சுற்றுலா கழகம் தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து ஏற்பாடு செய்துள்ள ஒரு சுற்றுலா திட்டத்தில் 600 ரூபாய் செலுத்தினால் மோடியின் பூர்வீக பூமியான வாட்நகருக்கு சென்று வரலாம். இத்திட்டத்திற்கு ‘மோடியின் கிராமத்தில் இருந்து ஒரு எழுச்சி‘ என பெயரிடப்பட்டுள்ளது.

அகமதாபாத் மற்றும் காந்தி நகரில் இருந்து மேற்கொள்ளப்படும் இந்த பயணத்தின் போது மோடி பிறந்த அவரின் மூதாதையர் வீடு, அவர் படித்த தொடக்கப்பள்ளி, மேடை நாடகங்களில் கலந்து கொண்ட உயர்நிலை பள்ளியையும் சுற்றுலா பயணிகள் பார்க்க முடியும். மோடியை பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால் அவருடைய பள்ளி நண்பர்களையும் பார்த்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் மோடி வாத்தியங்கள் வாசித்து வந்த கோவிலுக்கும் அழைத்து செல்லப்படுகிறார்கள்.

இந்த பயணத்தின் முக்கிய இடமாக மோடி டீ விற்ற வாட்நகர் ரெயில் நிலையம் இடம்பெற்றுள்ளது. சாதரண டீ விற்கும் சிறுவன் எப்படி இந்திய நாட்டின் அதிகாரம் மிக்க பிரதமர் பதவியை அடைந்தார் என்பதை தெரிந்துகொள்ள சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள் என குஜராத் சுற்றுலா கழகம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி