செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா!…

நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா!…

நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா!… post thumbnail image
மெல்போர்ன்:-உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மெக்கல்லம் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது.தாங்களுக்கு கிடைத்த அருமையான வாய்ப்பை பயன்படுத்த நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் தவறினார்கள். மெக்கல்லம் 3 பந்தில் ரன் ஏதும் எடுக்காமலும், குப்தில் 15 ரன்னிலும், வில்லியம்சன் 12 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த டெய்லர் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து 40 ரன்கள் எடுத்தார். ஆனால், எதிர்முனையில் விளையாடிய எலியாட் சிறப்பாக விளையாடி 83 ரன்கள் குவித்தார்.

அதன்பின் வந்த வீரர்கள் சொதப்பியதால் நியூசிலாந்து அணி 183 ரன்னில் சுருண்டது.
184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் பிஞ்ச்- வார்னர் ஜோடி களம் இறங்கியது. பிஞ்ச் 5 பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார்.அடுத்து வார்னருடன் சுமித் ஜோடி சேர்ந்தார். வார்னர் அதிரடியாக விளையாடினார். இதனால் ஆஸ்திரேலியா 9.2 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. தொடர்ந்து விளையாடிய வார்னர் 45 ரன்னில் அவுட் ஆனார். 46 பந்தில் 7 பவுண்டரியுடன் இந்த ரன்னை எடுத்த அவர், ஹென்றி பந்தில் அவுட் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வார்னர்- சுமித் 61 ரன்கள் குவித்தனர்.

வார்னர் அவுட் ஆகும்போது ஆஸ்திரேலியா 12.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது விக்கெட்டுக்கு சுமித் உடன் கேப்டன் கிளார்க் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தது. குறிப்பாக கிளார்க் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தார். அவர் 72 பந்தில் 74 ரன்கள் எடுத்த நிலையில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.அடுத்து வாட்சன் களம் இறங்கினார். சுமித் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். இதனால் ஆஸ்திரேலியா 33.1 ஓவரில் 186 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. சுமித் 56 ரன்னுடனும், வாட்சன் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 5-வது முறையாக உலகக்கோப்பையை வென்றுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி