செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலககோப்பை காலிறுதி மோதல்கள் – ஒரு பார்வை…

உலககோப்பை காலிறுதி மோதல்கள் – ஒரு பார்வை…

உலககோப்பை காலிறுதி மோதல்கள் – ஒரு பார்வை… post thumbnail image
சிட்னி:-11–வது உலககோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 14–ந்தேதி தொடங்கிய இந்தப்போட்டியில் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன. இன்றும் , நாளையும் ஓய்வு நாளாகும். 18–ந்தேதி கால் இறுதி ஆட்டங்கள் தொடங்குகிறது. ‘ஏ’ பிரிவில் இருந்து நியூசிலாந்து 6 வெற்றியுடன் 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், ஆஸ்திரேலியா 4 வெற்றி, ஒரு முடிவு இல்லை, ஒரு தோல்வியுடன் 9 புள்ளியுடன் 2–வது இடத்தையும், இலங்கை 8 புள்ளியுடன் 3–வது இடத்தையும், வங்காளதேசம் 7 புள்ளியுடன் 4–வது இடத்தையும் பிடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றன.

இங்கிலாந்து (4 புள்ளி), ஆப்கானிஸ்தான் (2), ஸ்காட்லாந்து (0) ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன. ‘பி’ பிரிவில் இந்தியா 6 வெற்றியுடன் 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தது. தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் 8 புள்ளிகள் பெற்றிருந்தன. இதனால் ரன்ரெட் அடிப்படையில் தென் ஆப்பிரிக்கா 2வது இடத்தையும் பாகிஸ்தான் 3வது இடத்தையும் பிடித்தது.வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து தலா 6 புள்ளிகள் பிடித்திருந்தது. ரன்ரெட் அடிப்படையில் வெஸ்ட் இண்டீஸ் கால் இறுதி போட்டிக்கு முன்னேறி அயர்லாந்தை வெளியேற்றியது. ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஏற்கனவே வாய்ப்பை இழந்து வெளியேற்றப்பட்டன. 18–ந்தேதி நடைபெறும் முதல் கால்இறுதி ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் 2–வது இடத்தை தென் ஆப்பிரிக்காவும், ‘ஏ’ பிரிவில் 3–வது இடத்தை பிடித்த இலங்கையும் பலப்பரீட்டை நடத்துகின்றன. இந்த ஆட்டம் சிட்னியில் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

19–ந்தேதி நடைபெறும் 2–வது கால்இறுதியில் ‘பி’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த இந்தியா– ‘ஏ’ பிரிவில் 4–வது இடத்தை பிடித்த வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. மெல்போர்ன் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு இந்தப்போட்டி நடக்கிறது.3–வது கால்இறுதி ஆட்டம் அடிலெய்டில் 20–ந்தேதி (காலை 9 மணி) நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியாவுடன் பாகிஸ்தான் மோதுகிறது. 4–வது கால்இறுதி ஆட்டம் வெலிங்டனில் (காலை 6.30) 21–ந்தேதி நடக்கிறது. இதில் நியூசிலாந்துடன் வெஸ்ட் இண்டீஸ் மோதுகிறது. 24–ந்தேதி முதல் அரை இறுதி ஆக்லாந்திலும் (காலை 6.30 மணி), 26–ந்தேதி 2–வது அரை இறுதி சிட்னியிலும் (காலை 9 மணி) நடக்கிறது. இறுதிப்போட்டி 29–ந் தேதி மெல்போர்னில் (காலை 9 மணி) நடக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி