செய்திகள் பிறந்த ஏழே வாரங்களில் ஹலோ சொன்ன அதிசய குழந்தை!…

பிறந்த ஏழே வாரங்களில் ஹலோ சொன்ன அதிசய குழந்தை!…

பிறந்த ஏழே வாரங்களில் ஹலோ சொன்ன அதிசய குழந்தை!… post thumbnail image
லண்டன்:-பத்து மாதங்கள் ஒரு கருவினை தனது வயிற்றில் சுமந்து, உலகிலேயே மிக கடுமையான வலி என்று கூறப்படும் பிரசவ வலியை தாங்கிக்கொண்டு, இரவுப் பகலாக கண் விழித்து, பசித்த நேரத்தில் எல்லாம் தன் உதிரத்தை தாய்ப்பாலாக வார்த்துத்தரும் ஒரு பெண் ஆனந்தப் பரவசமடையும் அற்புதத் தருணம் எது, தெரியுமா?… அந்தக் குழந்தை தனது தேனமுத வாயால் முதன்முறையாக அவளை ‘அம்மா’ என்றழைக்கும் அந்த அரை நொடிப் பொழுதில் அவள் அடையும் பேரானந்தம் பூலோக சொர்க்கத்துக்கு இணையானது என்று சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், சில குழந்தைகள் பிறந்து ஓராண்டு ஆகியும் மழலை மொழி பேச முடியாமல் திணறிக் கொண்டிருப்பதும் உண்டு. அதைப்போன்ற வேளைகளில் ஒன்றரை ஆண்டு வரை குழந்தைக்கு பேச்சு வரவில்லை என்றால் கவலைப்பட ஏதுமில்லை என டாக்டர்கள் ஆறுதல் கூறுகின்றனர்.
இந்நிலையில், அயர்லாந்து நாட்டில் வசிக்கும் ஒரு தம்பதியரின் குழந்தை பிறந்த ஏழே வாரங்களில் தெள்ளத்தெளிவாக ‘ஹலோ’ சொல்லி பெற்றோரை ஆனந்த வெள்ளத்தில் திக்குமுக்காட வைத்துள்ளது.
டோனி-பால் மெக்கேன் தம்பதியருக்கு பிறந்த ஆண் குழந்தையான சில்லியன், சில வாரங்களிலேயே தாயைப் பார்த்து சிரிக்க தொடங்கியது. துறுதுறுவென அலைபாயும் மகனின் கண்களை பார்த்து பரவசப்பட்ட டோனி, ஏழாவது வாரவாக்கில் மகனின் மழலை குறும்புகளை வீடியோ காட்சியாக படம் பிடிக்க முயன்றார்.
அப்போது, யாரும் எதிர்பாராத அந்த அதிசயம் நிகழ்ந்தது.

ரோஜாப்பூவுக்கு நிகரான கன்னங்களில் குழி விழ, தனது பொக்கை வாயை காட்டி சிரித்த சில்லியன், திடீரென ‘ஹலோ’ சொன்னான். தனது கண்களையும், காதுகளையும் தன்னால் நம்ப முடியாத டோனி, தனது கேமராவில் பதிவான காட்சிகளை ஓடவிட்டு பார்த்த பின்னர், ‘நாம் கனவுலகில் இல்லை. நிஜ உலகில்தான் இருக்கிறோம்’ என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். நான் அந்த காட்சியை வீடியோவாக எடுத்திருக்காவிட்டால் நான் சொல்வதை யாருமே நம்பியிருக்க மாட்டார்கள் என்று புல்லரிப்புடன் கூறும் இவருக்கு 12, 11, 8 வயதில் மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். ஆனால், நான்காவது குழந்தையான சில்லியன், பிறந்த ஏழே வாரங்களில் ‘ஹலோ’ சொல்லும் அந்த வீடியோவின் மூலம் குறுகிய காலத்திலேயே 34 வயதாகும் தனது தாயார் டோனியை உலகப் பிரபலமாகி விட்டான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி