செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 926 ஆக உயர்வு!…

பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 926 ஆக உயர்வு!…

பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 926 ஆக உயர்வு!… post thumbnail image
புதுடெல்லி:-பன்றிக்காய்ச்சல் நோய் இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் பன்றிக்காய்ச்சலால் அதிக உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஒரே நாளில் பன்றிக்காய்ச்சலுக்கு 51 பேர் பலியானார்கள். கடந்த 24ம் தேதி வரை பன்றிக்காய்ச்சலுக்கு 926 பேர் வரை பலியாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவரை பன்றிக்காய்ச்சலால் 16 ஆயிரத்து 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் தான் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அங்கு இதுவரை 234 பேர் பலியாகியுள்ளனர். 4884 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்ததாக குஜராத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு 231 பேர் பலியாகியுள்ளனர். அங்கு 3527 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 127 பேர் பன்றிக்காய்ச்சலால் இறந்துள்ளனர். 716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் 112 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். 1221 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலுங்கானாவில் 54 பேரும், கர்நாடகாவில் 39 பேரும், பஞ்சாப்பில் 38 பேரும் பன்றிக்காய்ச்சலால் இறந்துள்ளனர். டெல்லியில் பன்றிக்காய்ச்சலுக்கு 8 பேர் பலியாகியுள்ளனர். இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி