செய்திகள்,திரையுலகம் கேரக்டருக்காக வெயிலில் கருத்த நடிகர் சித்தார்த்!…

கேரக்டருக்காக வெயிலில் கருத்த நடிகர் சித்தார்த்!…

கேரக்டருக்காக வெயிலில் கருத்த நடிகர் சித்தார்த்!… post thumbnail image
சென்னை:-பலர் கூட்டாக முதலீடு செய்து கன்னடத்தில் தயாரித்து ஹிட்டான ‘லுசியா‘ படம் தமிழில் ‘எனக்குள் ஒருவன்’ பெயரில் உருவாகிறது. சி.வி.குமார் தயாரிக்கிறார். பிரசாத் ராமர் இயக்குகிறார். சித்தார்த், தீப்தி சன்னதி ஜோடி. இதுபற்றி சித்தார்த் கூறியது:நிஜம், கனவு என இருவித பரிமாணத்தில் இதன் கதை வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

கன்னடத்தில் இப்படத்தை பார்த்தபோது அதில் புதுமுகமாக நடித்த ஹீரோவின் ஒவ்வொரு அசைவும் புதுசாக இருந்தது. அதுபோல் எந்த சாயலும் எனது நடிப்பில் வந்துவிடக்கூடாது என்று முடிவு செய்துகொண்டேன். இருவித பாத்திரத்தில் ஒன்றில் கருப்பு நிற தோற்றம். இதற்காக வெயிலில் நின்று எனது தோல் நிறத்தை கருப்பாக்கினேன். ஹேர் ஸ்டைலும் மாற்றப்பட்டது. மாறி மாறி இருவேடங்களிலும் நடித்தால் கதாபாத்திரத்தில் ஒன்ற முடியாது என்பதற்காக ஒரு கதாபாத்திரத்தை முற்றிலுமாக முடித்துவிட்டு அடுத்த கதாபாத்திரத்தில் நடித்தேன்.

கருப்பு நிறத்துக்கு மாறியபிறகு உடன் நடித்த நடிகர், ஹீரோயின் தீபா சன்னதி, ரசிகர்கள் உள்ளிட்ட யாராலும் என்னை அடையாளம் காண முடியவில்லை. குணசித்திர நடிகர் ஒருவர் அருகிலேயே நான் நின்றிருப்பேன். அவரோ என்னை அடையாளம் தெரியாமல் நான் வந்தால் சாதாரணமாககூட என்னை பார்ப்பதில்லை. இதுபுது அனுபவமாக இருந்தது. இவ்வாறு சித்தார்த் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி