செய்திகள்,பரபரப்பு செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சல்!…

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சல்!…

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சல்!… post thumbnail image
புதுடெல்லி:-கொசுக்களால் டெங்கு காய்ச்சல், கோழிகளால் பறவை காய்ச்சல் என மக்களை காவு வாங்கும் நோய்களை குணப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் அந்நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் பன்றிக்காய்ச்சல் நோய் மக்களை பெருமளவில் காவு வாங்க தொடங்கியுள்ளது. துவக்க நிலையிலேயே இந்நோயை கண்டுபிடிக்கும் சோதனை மையங்கள் இல்லாதது முக்கிய காரணம் என்று கருதப்படுகிறது. இந்நோய் குறித்த பரிசோதனையை செய்ய வரும் டெல்லி மக்களிடம் ஈவிரக்கமில்லாமல் ரூ. 10000 வரை கட்டணத்தை பிடுங்குகின்றன சோதனை மையங்கள்.

இந்த வருட துவக்கத்திலிருந்து கடந்த 49 நாட்களில் மட்டும், நாடு முழுவதும் 671 பேர் பலியாகியுள்ளனர். இந்நோயால் பாதிக்கப்பட்ட 10025 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நோயால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களான ராஜஸ்தானில் 191 பேரும், குஜராத்தில் 155 பேரும், ம.பி.யில் 90 பேரும் இது வரை பலியாகியுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் குஜராத்தில் 255 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப்பில் 24 பேரும், அரியானாவில் 17 பேரும், உ.பி.யில் 6 பேரும் பலியாகியுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 2 பேர் பலியாகியுள்ள நிலையில் 71 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இதுவரை 46 பேர் பலியாகியுள்ள நிலையில், 1128 பேர் இந்நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜட்டா, நோயை குணப்படுத்த தேவையான மருந்துகள் தயார் நிலையில் உள்ளன என்றார். பெருமளவு மக்கள் நோய் தீவிரமடைந்தவுடன் தான் மருத்துவமனைக்கு வருகின்றனர். இதனால் உயிரிழக்க நேரிடுகிறது. தொடக்கத்திலேயே நோயை கண்டறிந்தால் உடனடியாக சிகிச்சை அளித்து நோயிலிருந்து காப்பாற்ற முடியும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி