செய்திகள்,திரையுலகம் நடிகர் விக்ரமிற்கு பாடல் பாடிய விஷால்!…

நடிகர் விக்ரமிற்கு பாடல் பாடிய விஷால்!…

நடிகர் விக்ரமிற்கு பாடல் பாடிய விஷால்!… post thumbnail image
சென்னை:-‘ஐ’ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் ‘பத்து என்றதுக்குள்ள’. விஜய் மில்டன் இயக்கி வரும் இப்படத்திற்கு டி.இமான் அவர்கள் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விக்ரமுக்காக வரும் அறிமுக பாடலை விஷால் தட்லானி அவர்கள் பாடியுள்ளாராம். டி.இமான் இசையில் விஷால் தட்லானி பாடிய பாடலின் பதிவு சமீபத்தில் நடந்துள்ளது.

வணக்கம் சென்னை படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானவர் விஷால் தட்லானி. அனிருத் இசையில் அவர் பாடிய ஓ பெண்ணே பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி