செய்திகள்,விளையாட்டு பயிற்சி ஆட்டத்தில் இலங்கையை தோற்கடித்தது ஜிம்பாப்வே!…

பயிற்சி ஆட்டத்தில் இலங்கையை தோற்கடித்தது ஜிம்பாப்வே!…

பயிற்சி ஆட்டத்தில் இலங்கையை தோற்கடித்தது ஜிம்பாப்வே!… post thumbnail image
நியூசிலாந்து:-உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் 1996 உலக கோப்பை ஜாம்பியன் இலங்கை ஜிம்பாவேயுடன் மோதியது. இந்த போட்டி நியூசிலாந்து லிங்கன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 279 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக திமுத் கருணரத்னே 58,ஜீவன் மெண்டிஸ் 51 ,லஹிரு திரிமன்னே 30, மஹளா ஜெயவர்த்தனே 30, ரன்களையும் எடுத்திருந்தனர்.. ஜிம்பாப்வே தரப்பில் சீன் வில்லியம்ஸ் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை கைபபற்றினார். பிராஸ்பர் உத்சயா, சாலமோன் மைர், தின்ஷே பன்யங்கரா, தவான்டா முப்பரிவா ஆகியோருக்கு தலா ஒரு விக்கெட் கைபற்றினர்.

280 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி இலனககி பந்து வீச்சாளர்களின் பந்துகளை துவமசம் செய்தது.. குறிப்பாக லசித் மலிங்கா பந்துகளை ஓட ஓட விரட்டினர். 7 ஓவர்கள் வீசிய மலிங்கா 46 ரன்களை அள்ளிக் கொடுத்ததோடு, விக்கெட் எதுவும் எடுக்க வில்லை.
ஹாமில்டன் மஸ்கட்ஸா அபாரமாக ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 117 ரன்களைக் குவித்தார். பிரன்டன் டெய்லர் 63 ரன்களைச் சேர்க்க, சீன் வில்லியம்ஸ் பேட்டிங்கிலும் பிரமாதமாக ஆடி 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், 45.2 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்புக்கு ஜிம்பாப்வே வெற்றி இலக்கை அடைந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி