செய்திகள்,திரையுலகம் மேக்கப் இல்லாமலே நான் அழகு – விஜய் பட ஹீரோயின் பெருமிதம்!…

மேக்கப் இல்லாமலே நான் அழகு – விஜய் பட ஹீரோயின் பெருமிதம்!…

மேக்கப் இல்லாமலே நான் அழகு – விஜய் பட ஹீரோயின் பெருமிதம்!… post thumbnail image
சென்னை:-மேக்கப் இல்லாமல் பார்க்கும் போது நடிகைகள் சாதாரண பெண்களாகவே தெரிகின்றனர். நடிகை காஜல் அகர்வால் மேக்கப் போடாமலேயே நான் அழகாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது:– நடிகைகள் எப்போதும் மேக்கப்புடன் இருப்பது வழக்கம். ஆனால் என்னை சந்திக்கிற நிறைய பேர் நீங்கள் மேக்கப் போடாமலே அழகாக இருக்கிறீர்கள் என்கின்றனர். இது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இரவில் அடிக்கடி நான் ஷாப்பிங் போவது உண்டு. அப்போது ரசிகர்களால் எந்த தொல்லையும் எனக்கு ஏற்படுவது இல்லை. ஆனால் வேறு சில நடிகைகள் இதுபோன்று ஷாப்பிங் போய் பிரச்சினைகளை சந்தித்து உள்ளனர். படப்பிடிப்பில்கூட யார் மனதையும் புண்படுத்த மாட்டேன். சூட்டிங் முடிந்ததும் சக நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கருடன் சகஜாமாக பழகுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி