செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் சனி கிரகத்தை போன்று வளையங்களுடன் கூடிய கிரகம் கண்டுபிடிப்பு!…

சனி கிரகத்தை போன்று வளையங்களுடன் கூடிய கிரகம் கண்டுபிடிப்பு!…

சனி கிரகத்தை போன்று வளையங்களுடன் கூடிய கிரகம் கண்டுபிடிப்பு!… post thumbnail image
லண்டன்:-விண்வெளியில் கொட்டி கிடக்கும் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் பயனாக புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதிய கிரகத்தை சமீபத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அது சனி கிரகத்தில் உள்ளது போன்று வளையங்களுடன் உள்ளது.

அதற்கு ஜெ 1407 பி என பெயரிடப்பட்டுள்ளனர். இதன் மீது படர்ந்திருக்கும் ஒளி தான் வாளையம் போன்று காட்சி அளிக்கிறது. இது இந்த கிரகத்தை சுற்றி 12 கோடி கி.மீட்டர் சுற்றளவு பரந்து விரிந்து கிடக்கிறது. இது சனி கிரகத்தின் வளையத்தை விட 200 மடங்கு பெரியது. இந்த வளையம் 30 அடுக்கு வளையங்களால் உருவாகியுள்ளது. நெதர்லாந்தின் வெய்டன் வானிலை நிறுவனம் மற்றும் ரோசஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஆய்வு மூலம் இந்த புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி