செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் பொங்கல் ரேசில் இருந்து விலகிய ‘என்னை அறிந்தால்’ – அதிர்ச்சித் தகவல்..!

பொங்கல் ரேசில் இருந்து விலகிய ‘என்னை அறிந்தால்’ – அதிர்ச்சித் தகவல்..!

பொங்கல் ரேசில் இருந்து விலகிய ‘என்னை அறிந்தால்’ – அதிர்ச்சித் தகவல்..! post thumbnail image
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் டிரைலருக்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

தல அஜித்தின் என்னை அறிந்தால் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், அனைத்து ரசிகர்களும் அவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.ஆனால் அவர்களுக்கு இப்போது ஒரு அதிர்ச்சியான தகவல் வந்துள்ளது. படம் இப்போது ஜனவரி 29ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் இன்னும் முழுமையாக முடியாததே இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே பொங்கலுக்கு விக்ரமின் ‘ஐ’, விஷாலின் ‘ஆம்பள’ ஆகிய படங்கள் வெளிவருவது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி