செய்திகள்,திரையுலகம் பிரம்மாண்டமாக உருவாகும் ‘விஜய் – 60′ திரைப்படம்!…

பிரம்மாண்டமாக உருவாகும் ‘விஜய் – 60′ திரைப்படம்!…

பிரம்மாண்டமாக உருவாகும் ‘விஜய் – 60′ திரைப்படம்!… post thumbnail image
சென்னை:-‘கத்தி’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய், சிம்புதேவன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து இளையதளபதி விஜய் ‘ராஜா ராணி’ புகழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதன் பிறகு சுப்ரமணியபுரம் என்ற ஒரே படத்தில் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் சசிகுமார். பின்னர் தனது 60 ஆவது படத்தை சசிகுமார் இயக்கப் போவதாகவும் , அந்த கதை விஜய்க்கு மிகவும் பிடித்துபோனதாகவும் செய்திகள் வெளியாகின.

சசிகுமார் தற்போது ‘தாரை தப்பட்டை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்த கையோடு ஏற்கனவே இவர், விஜய்க்கு கூறிய கதையை மீண்டும் எடுக்க உள்ளார். இந்நிலையில், விஜய் மற்றும் சசிகுமார் இணையும் இந்த படத்தை கல்பாத்தி எஸ். அகோரம் ஏ.ஜி.எஸ். எண்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பாக மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி