செய்திகள்,திரையுலகம் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ டீசர் இந்திய அளவில் முதலிடம்!…

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ டீசர் இந்திய அளவில் முதலிடம்!…

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ டீசர் இந்திய அளவில் முதலிடம்!… post thumbnail image
சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, திரிஷா மற்றும் பலர் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் யூடியூப் வீடியோ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களுக்குள்ளேயே 10 லட்சம் பார்வையாளர்களையும், 50000க்கும் மேற்பட்ட லைக்குகளையும் அள்ளி அந்த டீசர் சாதனை படைத்த்து. தற்போது மேலும் ஒரு சாதனையாக இந்திய அளவில் அதிக லைக்குகளை அள்ளிய டீசர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது.

‘என்னை அறிந்தால்’ டீசருக்கு தற்போது 62000 லைக்குகள் கிடைத்துள்ளது. 25 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதுவரை வெளிவந்துள்ள டீசர்களிலேயே இந்திய அளவில் அதிகமான லைக்குகள் பெற்று, ஒரு புதிய பரபரப்பை இந்த டீசர் ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டீசர் விவகாரத்தில் அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் கடுமையான வாக்குவாதம் நடைபெற்று வருகிறது.

தற்போது என்னை அறிந்தால் டீசர் சாதனை மேல் சாதனை படைத்து வருவதால் அதை தாங்கிக் கொள்ள முடியாத விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் என்னை அறிந்தால் டீசரைக் கிண்டலடித்து பல மீமீக்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால், அதையெல்லாம் கடந்து என்னை அறிந்தால் டீசர் சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி