செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் நடிகர் விஜய்யின் 22 வருட திரையுலக வாழ்க்கை – ஓர் சிறப்பு பார்வை!…

நடிகர் விஜய்யின் 22 வருட திரையுலக வாழ்க்கை – ஓர் சிறப்பு பார்வை!…

நடிகர் விஜய்யின் 22 வருட திரையுலக வாழ்க்கை – ஓர் சிறப்பு பார்வை!… post thumbnail image
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி நடிகர் விஜய் இன்றோடு திரையுலகில் காலடி எடுத்து வைத்து 22 வருடங்கள் ஆகிவிட்டது. புரட்சி இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களின் மகனான விஜய் அவர் இயக்கிய சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக தலை காட்டினார். பின்பு சினிமா வெறி அவரது இரத்தத்திலேயே இருந்த காரணத்தால் என்னமோ தன் அப்பாவிடம் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் நடித்த அண்ணாமலை படத்தின் வசனத்தை பேசி காட்டி, சினிமாவில் நடிக்க அனுமதி வாங்கினார்.

1992ல் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானர் இளையதளபதி விஜய். அதை தொடர்ந்து தன் அப்பாவின் கைப்பிடியில் பல படங்கள் நடித்தாலும் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக படம் தான் விஜய்யின் கேரியரில் ஒரு மைல் கல்லான படம். அதை தொடர்ந்து அவருக்கு பல குடும்ப பாங்கான ரசிகர்கள் வர தொடங்கினார். இந்த பேமிலி ஆடியன்ஸ் இமேஜை பயன்படுத்தி காதலுக்கு மரியாதை, லவ் டுடே, நினைத்தேன் வந்தாய் என பல படங்களில் நடித்து வெற்றி பெற்றார். இதன் பிறகு இவர் நடித்த பல படங்கள் தோல்வியிலேயே முடிய குஷி படம் தான் மீண்டும் விஜய்யின் கேரியர் கிராபை உயர்த்தியது. இதை சமீபத்தில் ஒரு மேடையில் அவரே கூறியிருந்தார்.

அதன் பிறகு பத்ரி, பிரியமானவளே, யூத் என அனைத்தும் ஹிட் அடிக்க, திருமலையில் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்தார். இதுநாள் வரை அனைவரும் அமைதியான விஜய்யை பார்த்து வந்த நிலையில் கில்லி, மதுர, திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி என திரையில் அதிரடி வேட்டை நடத்தியது மட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் அறுவடை வேட்டை நடத்தினார். இவர் நடித்த துப்பாக்கி திரைப்படம் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வசூல் சாம்ராஜ்ஜியம் நடத்தியது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த கத்தி திரைப்படமும் ரூ 100 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு பிறகு பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தில் இருப்பது இளைய தளபதி தான். இவரின் வெற்றி வேட்டை என்றும் நிலைக்க ‘இனியதமிழ்’ இணையதளம் சார்பாக வாழ்த்துக்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி