செய்திகள்,திரையுலகம் அஜித்தின் ‘என்னை அறிந்தால் டீசர்’ – ஒரு பார்வை!…

அஜித்தின் ‘என்னை அறிந்தால் டீசர்’ – ஒரு பார்வை!…

அஜித்தின் ‘என்னை அறிந்தால் டீசர்’ – ஒரு பார்வை!… post thumbnail image
சென்னை:-நீண்ட நாட்களாக காத்திருந்த தல ரசிகர்களுக்கு இன்று செம்ம விருந்து தான். கௌதம் மேனன் கிளாஸ் இயக்கத்தில் அஜித்தின் மாஸ் நடிப்பில் என்னை அறிந்தால் டீசர் வெளியாகிவுள்ளது. அஜித் டீசர் ஆரம்பத்திலேயே கம்பீரமான தன் குரலில், மெல்லிய கோடு, இதில் அந்த பக்கம் நின்றால் நல்லவன், இந்த பக்கம் வந்தால் ரொம்ப கெட்டவன் என்று அசத்துகிறார்.

அதற்கு பின்னணியில் ஹாரிஸின் இசையும், டானின் ஒளிப்பதிவும் ஹாலிவுட் ஸ்டையிலில் கலக்குகிறது. அஜித் டீசரிலேயே பல லுக்கில் வந்து செம்ம மாஸ் காட்டுகிறார். அதிலும் திரிஷாவுடன் ரொமான்ஸ் காட்சிகளில் முகவரி அஜித் போல் புன்னகைக்கிறார். இந்த டீசர் கண்டிப்பாக ரசிகர்களுக்கு சரவெடி தான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி